Kollywood : மே மாதம் வரப்போகுது.. ரிலீசுக்காக ரெடியான கோலிவுட் மூவிஸ் - சந்தானத்துடன் மல்லுக்கட்டும் "ஸ்டார்"!

First Published Apr 30, 2024, 10:20 AM IST

Kollywood Movies Releasing in May : இவ்வாண்டு மலையாள மொழி படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில், ரீ ரிலீஸ் படங்கள் தான் கோலிவுட் உலகை காப்பாற்றி வருகின்றது என்றே கூறலாம்.

Aranmanai 4

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பெரிய அளவில் எந்த கோலிவுட் திரைப்படமும் மக்கள் மனதில் நிற்கவில்லை என்று கூறினால் அது மிகையல்ல. இருப்பினும் அவ்வப்போது வெளியாகும் ரீ ரிலீஸ் திரைப்படங்கள் திரையரங்குகளை காப்பாற்றி வருகிறது. இந்நிலையில் மே மாதம் துவங்க உள்ள நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எதிர்வரும் மே மாதத்தில் வெளியாக உள்ளது. அதன்படி மே 3ம் தேதி சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது.

கிளாமர் காட்டினது போதும்.. எப்போ நடிக்க போறீங்க? நெட்டிசன்களின் கேள்விக்கு மாளவிகா மோகனனின் நச் பதில்!

Kurangu Pedal

அதேபோல சாய் தன்ஷிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "The Proof" திரைப்படமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள "குரங்கு பெடல்" திரைப்படமும் திரையரங்குகளில் மே 3ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kavin

அதேபோல மே 10ம் தேதி இளம் நாயகன் கவின் நடிப்பில் உருவாகியுள்ள "ஸ்டார்" திரைப்படம் வெளியாகவுள்ள அதே நாளில், காமெடி கிங் சந்தானத்தின் "இங்க நான் தான் கிங்கு" என்கின்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. நிச்சயம் சந்தானத்திற்கு, கவின் சிறந்த போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Rasavathi

மேலும் மே 10ம் தேதி அன்று நடிகர் அர்ஜுன் தாசின் "ரசவாதி" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், "உயிர் தமிழுக்கு" என்கின்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. அமீரின் இந்த திரைப்படத்தை ஆதம் பாபா இயக்கியிருக்கிறார்.

டிஆர்பி-யில் குக் வித் கோமாளியை காலி பண்ண ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் களமிறங்கும் லெஜண்ட்

click me!