Vijay Education Award Ceremony : செல்போனுக்கு தடை... விஜய்யின் கல்வி விருது விழாவில் இம்புட்டு கட்டுப்பாடுகளா?

First Published Jun 28, 2024, 9:55 AM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது விழாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vijay

நடிகர் விஜய் கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இரண்டாம் ஆண்டாக இந்த வருடமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

TVK vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் விருது விழா இது என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த முறை இந்த விழா நடைபெற்ற போது சரியான திட்டமிடல் இல்லாததன் காரணமாக காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 11 மணிவரை நீடித்தது. நடிகர் விஜய்யும் 12 மணிநேரம் கால்கடுக்க நின்று டயர்டு ஆகிப்போனார்.

இதையும் படியுங்கள்... Vijay : அரசியல் எண்ட்ரிக்கு பின் தளபதியின் முதல் ஸ்பீச் கேட்க ரெடியா? விஜய் கல்வி விருது விழா நேரலை வீடியோ இதோ

Vijay Education Award Ceremony

இதனால் இம்முறை அதுபோன்று நடக்காமல் இருக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. கடந்த முறை மிகவும் லேட் ஆனதற்கு அங்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் விஜய்யுடன் மேடையில் செல்பி எடுத்ததும் ஒரு முக்கிய காரணம். அதனால் இம்முறை அங்கு விருது வாங்க வருபவர்கள் செல்போன், கேமரா கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை வெளியே உள்ள பாதுகாப்பாளர்களிடம் கொடுத்துச் செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

restrictions in Vijay Education Award Ceremony

அதுமட்டுமின்றி அங்கு வந்துள்ள மாணவர்கள் பேனா, நோட்பேட் உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இவற்றை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்பட்டு, விழா முடிந்த பின்னர் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த முறையை விட இம்முறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... இன்னைக்கு ஒரு புடி... விஜய்யின் கல்வி விருது விழாவில் கம கமவென தயாராகும் விருந்து; மதிய உணவுப்பட்டியல் இதோ!

Latest Videos

click me!