தமிழக பாஜக உட்கட்சி மோதல்
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்று நாங்கள் என பாஜக கூறிவருகிறது. இதற்கு ஏற்றார் போல போராட்டம், ஆர்ப்பாடம் என அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. இந்தசூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாஜக முக்கிய தலைவர்களை தேர்தலில் களம் இறங்கியது.
குறிப்பாக இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டவர்களை களம் இறக்கியது. இதனால் பாஜகவின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்ட 40 இடங்களில் தோல்வி அடைந்தது. பெரும்பாலான தொகுதியில் டெபாசிட் இழந்தது.
தமிழிசை - அண்ணாமலை மோதல்
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த அண்ணாமலைக்கும்- தமிழிசைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. யாருக்கு தமிழக பாஜகவில் அதிகாரம் என்ற போட்டி தொடங்கியது. தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழிசை தமிழக பாஜகவில் ரவுடிகள் அதிகளவு சேர்க்கப்பட்டதாக விமர்சித்தார்.
இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டனர். தனக்கு எதிரான கருத்தால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, பாஜக தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு தடை விதித்தார். பாத்ரூம் போகும் போது வரும் போது இனி பிரஸ் மீட் இல்லையென அறிவித்தார். இது தமிழிசைக்கு வைக்கப்பட்ட செக் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
செங்கோலை அவமதிக்கும் இந்தியா கூட்டணி! இப்ப நாச்சி புரிஞ்சுக்கோங்க! இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள்!முருகன்
தமிழிசையை கண்டித்த அமித்ஷா
இதற்கு ஏற்றார் போல ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழிசையை மேடையிலேயே அமித்ஷா கண்டித்தார். இதனால் பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திடீர் அழைப்பின் காரணமாக தமிழிசை டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மேடையில் எல்லோருக்கும் முன் பேசியதற்கு அமித்ஷா வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கைவிட்ட நீதிமன்றம்.. கைது பீதியால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு.. சுத்து போட களமிறங்கிய 5 தனிப்படைகள்!
மீண்டும் ஆளுநர் ஆகிறார் தமிழிசை
மேலும் இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் பாஜகவின் நிலை, வளர்ச்சி மற்றும் உட்கட்சி மோதல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இரண்டு தலைமை ஒரே இடத்தில் இருப்பதால் அதிகார மோதல் வரும் என்பதை உணர்ந்த பாஜக தலைமை தமிழிசைக்கு வேறு பொறுப்பு கொடுத்து அதாவது ஆளுநர் அல்லது மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வழங்கி அரசியலில் இருந்து விலக்கி வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
எனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பல மாநில ஆளுநர் பதவி அடுத்த மாதம் காலியாகவுள்ளது. எனவே எதாவது ஒரு மாநிலத்திற்கு தமிழிசை மீண்டும் ஆளுநர் ஆக்கப்படலாம் என தகவல் கூறப்படுகிறது.