Khushbu : என் வாழ்நாளில் மதுவை தொட்டதே இல்லை.. Black wine குடித்ததாக கூறிய புகாருக்கு குஷ்பு பதிலடி

Published : Jun 27, 2024, 11:52 AM ISTUpdated : Jun 27, 2024, 12:04 PM IST

என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டதே இல்லை என்பது உலகுக்குத் தெரியும் என கூறியுள்ள நடிகை குஷ்பு, எனவே என்னை அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக திராவிட இயக்க ஆர்வலர் ஶ்ரீவித்யா  மீது அவதூறு வழக்கு பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளார்.

PREV
15
Khushbu : என் வாழ்நாளில் மதுவை தொட்டதே இல்லை.. Black wine குடித்ததாக கூறிய புகாருக்கு குஷ்பு பதிலடி

கள்ளக்குறிச்சியில் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சியில் மது குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் சார்பாக நடிகை குஷ்பு கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
 

25

Black wine குடிக்கும் குஷ்பு

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இதனை விமர்சித்த சமூக ஆர்வலரும், யூடியூப்பில் பாஜகவை விமர்சித்து வரும் ஶ்ரீவித்யா பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், Black wine குடிக்கும் குஷ்புவுக்கு தான் இதனை விசாரிக்கும் முழு தகுதியும் உண்டு. நீங்க விசாரிங்க மேடம் என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதனால் ஆவேசமடைந்த குஷ்பு ஶ்ரீவித்யாவிற்கு பதிலடி கொடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

35

 நீங்க தான் ஊத்தி குடுத்தீங்களா.?

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், அக்கா நீங்க ஊத்தி குடுதிங்களா? ஒரு பெண்ணாக நீங்கள் இதைச் சொல்லும்போது, ​​உங்கள் முதலாளியை மகிழ்விக்க நீங்கள் எவ்வளவு ஆசைப்படுகிறீர்கள் என்பதை இந்த பதிவு காட்டுகிறது. ஒருவேளை நீங்கள் இந்த மது குடிக்கும் கலாச்சாரத்திற்கு ஆளான சூழலில் வளர்ந்திருக்கலாம்.  

45
kushpoo

என் வாழ்நாளில் மதுவை தொட்டதே கிடையாது

ஆனால் என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டதே இல்லை என்பது உலகுக்குத் தெரியும். எனவே என்னை அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக உங்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமேடையில் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதை முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி தயங்காது என கூறியுள்ளவர், இதனை நான் திமுகவில் இருந்த போதும் உணர்ந்ததாக  என தெரிவித்துள்ளார் இன்னும் திமுகவில் எதுவும் மாறவில்லை என குறிப்பிட்டுள்ளார். 
 

55
Kushboo

இதையெல்லாம் பார்க்க கருணாநிதி இல்லை

இது போன்ற மோசமான நிகழ்வுகளை காண கலைஞர் கருணாநிதி இல்லை என்பதை பார்க்கும் போது நட்சத்திரங்களுக்கு நன்றி  சொல்ல வேண்டும் என குஷ்பு பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கீழ் மணிப்பூர் பெண்களின் அழுகை கேட்கல.. பிரஜ்வலிடம் மாட்டிய பெண்களின் குடும்பங்கள் அழுகை கேட்கல..   பாலியல் தொந்தரவுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகளின் அழுகை கேட்கல..  சினிமா  உலகில் நடக்கும் தவறுகளை சுட்டிகட்டவில்லை என நடிகை குஷ்புவை விமர்சித்து கமெண்டுகள் பதியப்பட்டு வருகிறது. 

click me!

Recommended Stories