Vegetables Price : குறையும் காய்கறிகள் விலை.! ஒரு கிலோ தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட் விலை என்ன தெரியுமா.?

First Published Jun 28, 2024, 8:03 AM IST

காய்கறிகளின் உற்பத்தி குறைவு மற்றும் விஷேச நாட்கள் காரணமாக காய்கறிகளின் விலையானது உச்சத்தில் நீடித்தது. தற்போது சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி, வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விலையும் குறைய தொடங்கியுள்ளது. 

vegetable price

குறையும் தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உச்சத்தில் இருந்த தக்காளி விலையானது சற்று குறைந்துள்ளது.  அந்த வகையில் ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 30ரூபாய்க்கும்,  கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காலையில் சீக்கிரம் எழுவதற்கு இனி அலாரம் தேவையில்லை.. இந்த 4 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்!
 

இஞ்சி விலை நிலவரம்

இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Rain : எங்க போனாலும் குடை முக்கியம்.. தமிழகத்தில் 7 நாளுக்கு மழை இருக்கு.. மீனவர்கள் ஜாக்கிரதை - நியூ அப்டேட்!

Latest Videos

click me!