Jun 27, 2024, 6:34 PM IST
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்பி, இந்தியாவில் செங்கோல் ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பேசிய கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு அளித்த நிலையில் இதுகுறித்து நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் மூத்த பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி பதில் கூறியிருக்கிறார்.
நமது செய்தியாளரிடம் பேசிய நாராயணன் திருப்பதி, "செங்கோல் என்பது நீதி தவறாமல் ஆட்சி செய்வதற்கான அடையாளம், இது அரசாட்சியை குறிப்பது அல்ல. இது தமிழ் தெரிந்தவர்களுக்கு, நமது கலாச்சாரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எதிர்கட்சிகளுக்கு, குறிப்பாக INDIA கூட்டணியில் உள்ளவர்களுக்கு தமிழக கலாச்சாரத்தை அழிப்பதே எண்ணமாக இருக்கிறது.
நிச்சயம் அதற்கு திமுகவும் துணை போகிறது. ஆகவே நமது தமிழகத்தின் தொன்மையும், இந்திய நாட்டின் பாரம்பரியதையும் இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. தமிழர்களை, தமிழக கலாச்சாரத்தை அழிக்கும் எண்ணத்தில் தான் காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.