கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி.. 5 பேர் காயம்.. விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்..
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துது விசாரணை நடத்தியதில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது விபத்து நிகழ்ந்துள்ளது.