வெள்ளத்தால் வடக்கு சிக்கிமில் உள்ள பல பகுதிகளுக்கு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது. அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவப் பொறியாளர்கள் டிக்சு-சங்க்லாங் சாலையில் டெட் கோலா பகுதியில் பெய்லி பாலத்தை அமைத்தனர்
சிக்கம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் இன்ஜினியர்கள் 72 மணிநேரத்தில் 70 அடி பெய்லி பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காங்டாக்கில் டிக்ச்சு-சங்க்லாங் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஜூன் 23ஆம் தேதி தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 72 மணிநேரத்திற்குள் பாலம் பயன்பாட்டுக்கு் தயாராகிவிட்டது.
"சிக்கிமில் சமீபத்திய ஏற்பட்ட வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு இணைப்பை மீட்டெடுப்பதில் உள்ளூர் நிர்வாகத்தினருடன் திரிசக்தி கார்ப்ஸ் ராணுவப் பொறியாளர்களும் பணியாற்றினர். இடைவிடாத மழை மற்றும் தொழில்நுட்ப சவால்களைத் தாண்டி, டிக்ச்சு - சங்க்லாங் சாலையில் 70 அடி பெய்லி பாலத்தை உருவாக்கியுள்ளனர்" என்று குவஹாத்தியில் உள்ள ராணுவச் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது! ஒரே வாரத்தில் 4வது சம்பவம்... பீதியில் பொதுமக்கள்!!
Supporting & local administration, engineers of Trishakti Corps built a 70-ft Bailey Bridge on Dikchu-Sanklang road amidst floods in . Despite heavy rains & technical challenges, bridge was completed within 72 hours,restoring a vital link & to Mangan district. pic.twitter.com/49j3HSrCTl
— PRO, GUWAHATI, MINISTRY OF DEFENCE, GOVT OF INDIA (@prodefgau)"வெள்ளத்தால் வடக்கு சிக்கிமில் உள்ள பல பகுதிகளுக்கு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது. அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவப் பொறியாளர்கள் டிக்சு-சங்க்லாங் சாலையில் டெட் கோலா பகுதியில் பெய்லி பாலத்தை அமைத்தனர்" என்று அவர் கூறினார்.
"ஜூன் 23ஆம் தேதி தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி 72 மணிநேரத்திற்குள் முடிக்கப்பட்டது. இந்த பாலம், திக்சுவிலிருந்து சங்க்லாங்கிற்குச் செல்லும் வாகனப் போக்குவரத்திற்கு ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கும். மாங்கன் மாவட்ட மக்கள் இதன் மூலம் அதிகம் பயன் அடைவார்கள்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை மாநில வனத்துறை அமைச்சரும், மாநில பேரிடர் மேலாண்மை செயலாளருமான பின்ட்சோ நம்கியால் லெப்சா ஜூன் 27ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் சென்ற ஜூன் 11ஆம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வடக்கு சிக்கிமில் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக டிக்சு-சங்க்லாங்-டூங், மங்கன்-சங்க்லாங், சிங்தாம்-ரங்ராங் மற்றும் ரங்ராங்-தூங் போன்ற சாலைகளில் பல நிலச்சரிவுகள் மற்றும் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன
திரிசக்தி கார்ப்ஸைச் சேர்ந்த இந்திய ராணுவப் பொறியாளர்கள், வடக்கு சிக்கிமில் 150 அடி பாலம் ஒன்றைக் கட்டி, தொடர் கனமழையால் தனிமைப்படுத்தப்பட்ட எல்லைக் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
விஜய்யின் த.வெ.க கல்வி விருது விழாவில் வித விதமான நா ருசிக்க மதிய உணவுப்பட்டியல்!!