இன்னைக்கு ஒரு புடி... விஜய்யின் கல்வி விருது விழாவில் கம கமவென தயாராகும் விருந்து; மதிய உணவுப்பட்டியல் இதோ!
தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் தரமான மதிய உணவு வழங்க தவெக நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்பாடு செய்திருக்கும் மதிய உணவுப் பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெற உள்ள நிலையில், விருது பெறும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வழங்கவுள்ள மதிய உணவுப் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.
கல்வி விருது என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை விஜய் தானே நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு வழங்குகிறார். இந்த விருதுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த விருது நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட நிகழ்வு நாளை நடக்க உள்ளது. இரண்டாம் கட்ட நிகழ்வு ஜுலை 3ஆம் தேதி நடைபெறும்.
மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை: முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
இந்நிலையில், திருவான்மியூர் ராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் முதல்கட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருது வாங்கும் விழாவில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாற்காலிகள் அமைப்பது, பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளை விஜய்யின் த.வெ.க. தொண்டர்கள் செய்துவருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
முதற்கட்டமாக சுமார் 800 மாணவ மாணவிகள் கல்வி விருது பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு தரமான மதிய உணவு வழங்க தவெக நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் ஏற்பாடு செய்துள்ளனர்.
சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் ஆகியவை மதிய உணவில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த உணவுப் பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஜியோ ரீசார்ஜ் கட்டணம் 25 சதவீதம் உயர்வு! அடேங்கப்பா... இந்த விலையில் புது பிளான் கட்டுப்படி ஆகுமா?