ஜியோ ரீசார்ஜ் கட்டணம் 25 சதவீதம் உயர்வு! அடேங்கப்பா... இந்த விலையில் புது பிளான் கட்டுப்படி ஆகுமா?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்டு திட்டங்களுக்கு 25 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்டு திட்டங்களுக்கு 25 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வியாழக்கிழமை வெளியான இந்த அறிவிப்பில், இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. மலிவு விலையில் இணைய சேவையை வழங்குவதில் உறுதியாக இருப்பாதகவும் வேகமாக வளர்ந்துவரும் 5G நெட்வொர்க் வாடிக்கையாளர்களில் 85% பேரை ஜியோ பெற்றிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
புதிய கட்டண அறிவிப்பின்படி, ஒரு மாதத்திற்கான 2GB டேட்டா பிளான் ரூ.189 விலையில் கிடைக்கும். தினசரி 2.5GB வழங்கும் வருடாந்திர திட்டத்திற்கு ரூ.3,599 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 2GB அல்லது அதற்கு மேல் டேட்டா வழங்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
OPPO A3 Pro: சான்சே இல்ல... வெற லெவல் டேமேஜ் ப்ரூஃப் பாடியுடன் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்
“எல்லா இடங்களிலும் உயர்தர இணைய சேவை மலிவு விலையில் கிடைப்பது டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாகும். இதற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்கிறது. ஜியோ எப்போதுமே நமது நாட்டுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும். இந்தியாவின் நலனுக்காக தொடர்ந்து முதலீடுகள் செய்வோம்” என்று ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் டேட்டா நுகர்வு மற்றும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு பரவலாக்கப்பட்டதில் ஜியோ குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தின் நுழைவவால் போட்டியாளர்கள் கட்டணங்களைக் குறைக்கவும் சேவையின் தரத்தை மேம்படுத்தவும் நெருக்கடி உருவானது.
கட்டண உயர்வுடன் JioSafe மற்றும் JioTranslate சேவைகளையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ சேஃப் மாதம் ரூ.199 விலையில், பாதுகாப்பான போன் கால், மெசேஜிங் மற்றும் டேட்டா பரிமாற்ற வசதிகளை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் ஜியோ டிரான்ஸ்லேட், மாதத்திற்கு ரூ. 99 விலையில் கிடைக்கும். இது வாய்ஸ் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் படங்களை மொழிபெயர்க்க உதவுகிறது. இதன் மூலம் வெவ்வேறு மொழிகளுக்கு இடையே தொடர்புகொள்ளும் வசதியை அதிகரிக்கிறது. இந்த இரண்டு சேவைகளும் ஜியோ பயனர்களுக்கு ஓர் ஆண்டுக்கு இலவசமாகவே கிடைக்குமாம்.
ஒரே நாடு ஒரே சார்ஜர்! ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் அதிரடி உத்தரவு!