மலையாள சினிமா தந்த மாஸ்டர் பீஸ் படம்... தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் மாஸ் காட்ட வருகிறது மஞ்சும்மல் பாய்ஸ்

First Published Apr 28, 2024, 11:09 AM IST

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Manjummel boys

2024-ம் ஆண்டு டாப் பார்மில் இருக்கும் ஒரே திரையுலகம் மலையாளம் தான். அதுவும் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் வரிசையாக மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தது மலையாளம் சினிமா. அந்த மாதம் மலையாளத்தில் வெளிவந்த பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய மூன்று படங்களும் மாஸ் ஹிட் அடித்தன. இதையடுத்து மார்ச் மாதம் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

manjummel boys ott release date officially announced

பின்னர் ஏப்ரலில் வருஷங்களுக்கு சேஷம் மற்றும் பகத் பாசிலின் ஆவேஷம் ஆகிய திரைப்படங்கள் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தன. மேற்கண்ட படங்களில் பிரேமலு மற்றும் ஆவேஷம் ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை அள்ளியது. அடுத்தபடியாக ஆடுஜீவிதம் திரைப்படம் ரூ.150 கோடி வசூலை வாரிக்குவித்தது. மேலும் பிரம்மயுகம் மற்றும் வருஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்கள் ரூ.50 கோடி வசூலை அசால்டாக எட்டிப்பிடித்து அசத்தின.

இதையும் படியுங்கள்... SK Love : என் லைஃப்ல இருந்த ஒரே லவ்... அதுவும் ஒன்சைடு லவ்- காதல் தோல்வி குறித்து மனம்திறந்த சிவகார்த்திகேயன்

manjummel boys ott release on disney plus hotstar

இந்த லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும் படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்படங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தமிழக திரையரங்குகளை ஆக்கிரமித்த மஞ்சும்மல் பாய்ஸ், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

manjummel boys ott release date

இத்தகைய மகத்தான சாதனைகளை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அதன் ரிலீஸ் அப்டேட் வந்துள்ளது. அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வருகிற மே 5-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் தியேட்டரை போல் ஓடிடியிலும் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Indian 2: ஜூன்மாத ரிலீஸில் இருந்து பின்வாங்கும் இந்தியன் 2! கடைசி நேரத்தில் கமல் படத்துக்கு வந்த சிக்கல் என்ன?

click me!