School Reopen: பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? வெளியாகப்போகும் முக்கியஅறிவிப்பு!

First Published Mar 17, 2024, 7:34 AM IST

ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

Election Commission

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மார்ச் 20 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 

Lok Sabha Election

வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும்  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

School Reopen

இந்நிலையில், ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பள்ளி திறப்பு ஜூன் 1ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

temperature

மறுபுறம் கோடை நாட்கள் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக இதுவும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

click me!