மிக கன மழை பெய்யப்போகுது... மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருங்க- அலர்ட் செய்த பொது சுகாதாரத்துறை

By Ajmal Khan  |  First Published May 20, 2024, 8:06 AM IST

தமிழகத்தில் மழையானது வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 


அதி கன மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைஆய்வு மையம் அறிவுறுத்துள்ள நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும்  மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  

Tap to resize

Latest Videos

குற்றால அருவி வெள்ளப்பெருக்கு.. இரு நாள்களுக்கு முன் இறந்த அஸ்வின் - மாபெரும் தியாகியின் கொள்ளுப்பேரன்!


நிவாரண முகாம்கள்

தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் இதனை  அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Vegetables : கிடு,கிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை.. ஒரு கிலோ தக்காளி, வெங்காயம், பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?

click me!