5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... எத்தனை தொகுதி.? நட்சத்திர வேட்பாளர்கள் யார் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 20, 2024, 6:57 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்காக 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
 


5ஆம் கட்ட தேர்தல்

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலானது ஏப்ரல் மாதம்  19, 26 மற்றும் மே மாதம்  7, ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே 20ஆம் தேதி அதாவது இன்று 5ஆம் கட்டத் தேர்தல் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை  எதிர்கொள்ள காங்கிரஸ் - பாஜக கட்சிகள் தீவிரமாக உள்ளது. இதனிடையே தேர்தலில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

நட்சத்திர வேட்பாளர்கள் யார்.?

இன்றைய தேர்தலில் முக்கிய நட்சத்திர வேட்பாளர்களாக ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜநாத் சிங், பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் 49 தொகுதிகளுக்கான தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் என மொத்தம் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

ரேபரேலியை குடும்ப சொத்தாக நினைக்கிறார்கள்: சோனியா காந்தியை சாடிய பிரதமர் மோடி!
 

click me!