Anant Ambani : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடுகள் வெகு ஜோராக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.
கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன் பிறகு நடந்த திருமணத்திற்கு முன்னதான நிகழ்வுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மே மாதம் 28ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனந்த் அம்பானியின் திருமண வைபவங்கள் யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திராத அளவில் மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி சுமார் 800 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த நிகழ்வு ஒரு இடத்தில் நடக்காமல், ஒரு பிரம்மாண்ட சொகுசு கப்பலில், இத்தாலி நாட்டிலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்ஸ் பகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த சொகுசு கப்பலில் ஆனந்த அம்பானியின் திருமண வைபவக நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
கப்பலில் சுமார் 600 ஊழியர்கள், விருந்தினர்களை உபசரிக்க நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் சுமார் 4380 கிலோ மீட்டர் தூரம் அந்த சொகுசு கப்பல் பயணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பலவிதமான ஏற்பாடுகளை அம்பானி குடும்பத்தினர் செய்து வருகின்றனர் என்றே கூறலாம்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாம்நகரில் நடந்த திருமண வைபக விழாவில் பல்வேறு சிறப்பு மிக்க விஷயங்கள் செய்யப்பட்டது. சாப்பாட்டுக்கு மட்டும் சுமார் 300 கோடி அளவில் செலவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை நடந்த இந்த திருமண வைபோகத்தில் சுமார் 1200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணம் நடக்க உள்ளது. தங்கள் இளைய மகன் திருமணத்தை, பெற்றோர் மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செம்ம கியூட்...கமல், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட டாப் ஹீரோயினா இவங்க?