கேரள மாநிலம் மூணாரில் படையப்பா யானை பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முணார் அருகே யானை ஒன்று அடிக்கடி உலா வருவது வழக்கமாகும். அந்த யானைக்கு படையப்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூணார் அருகேயுள்ள கல்லார் என்ற இடத்தில் கழிவுகளை தரம் பிரிக்கும் குப்பை கிடங்கில் காணப்பட்ட காய்கறி கழிவுகளை படையப்பா யானை உணவாக எடுத்துக்கொண்டது.
அப்பொழுது அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் படையப்பா யானை திண்றது. அந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டும் இதேபோன்று படையப்பா யானை அங்கு வந்து பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட வீடியோ ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளாவில் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அதிதீவிர மழைக்கு வாய்ப்பு!
அதன் தொடர்ச்சியாக, தற்போதும் படையப்பா யானை காய்கறி கழிவுகளோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் உட்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக அந்த இடத்துக்கு வரும் படையப்பா யானை காய்கறி கழிவுகளோடு அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்ந்து உணவாக எடுத்துக் கொள்வதாக தெரிகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். படையப்பா யானை இதுபோன்று தொடர்ச்சியாக பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் அவை ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும், இச்சம்பவம் இனியும் தொடராமல் இருக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.