கேரளாவில் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அதிதீவிர மழைக்கு வாய்ப்பு!

By Manikanda Prabu  |  First Published May 19, 2024, 3:36 PM IST

கேரளாவில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புள்ளதால் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும்  'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது


கேரளாவில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புள்ளதால் இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும்  'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மாநிலத்தில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புள்ளதால் இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

அந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 20.4 செ.மீ., அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

டீ பந்தலாக மாறிய அதிமுகவின் தண்ணீர் பந்தல்: புதுக்கோட்டையில் ருசிகரம்!

அதன்படி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர் நிலைகள் தொடர்பான சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா துறையினர் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மழை முன்னெச்சரிக்கை வாபஸ் பெறும் வரை கட்டுப்பாடுகள் தொடரும். மண் சரிவு, நிலச்சரிவு ஆகியவற்றிற்கு வாய்ப்புள்ள பகுதிகளில் மழை முடியும் வரை கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.

click me!