துபாயில் வெயில் கொஞ்சம் அதிகம்.. குட்டியாக டிரஸ் போட்டு காற்றோட்டமாக வளம் வரும் ஐஸ்வர்யா மேனன்!

First Published Aug 21, 2023, 11:28 AM IST

தனது 28 வது வயதில் பயணித்து வரும் பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள், ஈரோட்டில் பிறந்தவர் என்றாலும் இவருடைய பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் பிறந்து அங்கேயே தனது பள்ளிப்படிப்பையும் முடித்தார்.

சென்னையில் பொறியியலில் பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா மேனன், கடந்த 2012 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக களமிறங்கினார். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

சந்திரயானை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ்... ரவுண்டு கட்டி வெளுத்துவாங்கிய நெட்டிசன்கள்!

கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்களில் நடித்து சிறந்த நாயகியாக இவர் வலம் வருகிறார்.
 

கடந்த 2018 ஆம் ஆண்டு சி.எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான நடிகர் சிவாவின் "தமிழ் படம்" இரண்டாம் பாகத்தில் கதையின் நாயகியாக களமிறங்கினார் ஐஸ்வர்யா மேனன். அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல.

அதனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதிய நடிப்பில் வெளியான "நான் சிரித்தால்", அதை தொடர்ந்து வெளியான வேழம், தெலுங்கு திரைப்படமான ஸ்பை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன், தற்பொழுது மலையாள மொழியில் உருவாகி வரும் பஸ்சுக்கா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

42 வயதிலும் கவர்ச்சி போதையில் சுற்றும் நடிகை கிரண் ரத்தோர்... கிக் ஏற்றும் கிளாமர் கிளிக்ஸ் இதோ

click me!