500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

First Published Sep 9, 2022, 5:22 PM IST

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். மிக அதிகமான வயதில் பிரிட்டன் அரியணையில் அமரும் வாரிசு என்ற பெருமை சார்லசுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். 96 வயதான அவர்  பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ள பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். அத்துடன் அவரது மனைவி கமிலா ராணியானார். இதன் மூலம் விலை உயர்ந்த கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமலாவசம் சென்றுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 21 கிராம் எடை கொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் ராணியின் கிரீடத்தில் உள்ளது.

இதை கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அவர் மறைவை ஒட்டி கமிலா வசம் செல்கிறது. ராணி இறந்த 24 மணிநேரத்திற்குள் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு..வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

இவருக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டும் விழா இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். மிக அதிகமான வயதில் பிரிட்டன் அரியணையில் அமரும் வாரிசு என்ற பெருமை சார்லசுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

Charles

மூன்றாம் சார்லஸ் 54 நாடுகள் அடங்கிய காமன் வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். ராணி எலிசபெத் தனது முதலீடுகள், கலை சேகரிப்பு, நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ஆகியவற்றின் மூலம் சுமார் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார். ராணி எலிசபெத் மறைந்ததை அடுத்து, பின்பு இளவரசர் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில் பெரும்பாலான சொத்துக்கள் அவருக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ராணி எலிசபெத்தின் தாயார் தாயார் 2002 ஆம் ஆண்டு இறந்தபோது அவரது 70 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை எலிசபெத் பெற்றார்.  ராணி எலிசபெத் தனது தாயார் விட்டுச் சென்ற சொத்துக்களைக் கைப்பற்ற வாரிசு வரி அதாவது inheritance tax செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க, பிரிட்டன் நாட்டின் அரசு அமைப்பில் ஒரு சிறப்புச் சட்டப் பிரிவு உள்ளது. இந்த விதி தற்போது இளவரசர் சார்லஸுக்கும் பொருந்தும் என்பதால், இவருக்கும் 40 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பெறுவார்.

இந்த வரிச் சலுகையானது இரண்டாம் எலிசபெத் ராணியின் தனிப்பட்ட சொத்துக்களாக இருக்கும் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். அதுமட்டுமல்லாமல், பிரிட்டனின் தேசிய கீதம் God Save the Queen என்பதில் இருந்து God Save the King  என மாற்றமடையும்.அதேபோல மூன்றாம் சார்லஸ் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட புதிய நாணயங்கள் வெளியிடப்படும். இனி இவரது கையெழுத்துக்கு பின்னால் கூடுதலாக R என்ற எழுத்து சேர்க்கப்படும்.

மேலும் செய்திகளுக்கு..Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

இந்த R என்பது என்பது Rex என்ற லத்தீன் மொழியில் மன்னர் என்பதை குறிக்கும்.மேலும், மூன்றாம் சார்லஸ்ஸுக்கு ஏற்ப தனித்துவமான கொடி ஒன்று வடிவமைக்கப்படும். அதே போல, ராயல் பர்ம் (Royal Firm) இந்த நிறுவனத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, கார்ன்வால் டச்சஸ், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட், கேம்பிரிட்ஜ் டச்சஸ், இளவரசி அன்னே, ராணியின் மகள் மற்றும் இளவரசர் எட்வர்ட், ராணியின் இளைய மகன் மற்றும் அவரது மனைவி சோஃபி, கவுண்டஸ் ஆஃப் வெசெக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இது Monarchy என்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது. சுமார் 28 பில்லியன் டாலர் அளவிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்துள்ளது. கிரவுன் எஸ்டேட் என்பது பிரிட்டிஷ் அரசு குடும்பத்திற்கது சொந்தமான நிலங்கள் மற்றும் உடைமைகளின் தொகுப்பாகும், இது ராணி இரண்டாம் எலிசபெத் வசம் இருந்தது தற்போது அவரின் மறைவிற்குப் பின்பு தற்போது மன்னர் சார்லஸுக்கு வர உள்ளது.

இனி மூன்றாம் சார்லஸ் எந்தவொரு உரிமம், அதாவது எந்தவொரு பாஸ்போர்ட்டோ, லைசன்சோ இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அதே போல பிரிட்டனில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடிய ஒரே நபர் மன்னர் மட்டுமே. சார்லஸின் தாயார், இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இரண்டு பிறந்தநாள்கள் இருந்தது. ஏப்ரல் 21 அன்று அவரது உண்மையான பிறந்த நாள் ஆகும். மேலும் ஜூன் மாதம் இரண்டாவது செவ்வாய் அன்று அதிகாரப்பூர்வ பொதுக் கொண்டாட்டம், கோடை காலநிலை வெளிப்புற அணிவகுப்புகளுக்கு சிறப்பாக இருக்கும்.

நவம்பர் 14 அன்று சார்லஸின் பிறந்தநாள் ஆகும். குளிர்காலத்தின் தொடக்கத்தில் இருப்பதால், அதே மாதத்தில் பிறந்தநாள் மற்றொரு நாளில் கொண்டாடப்படும். பிரிட்டிஷ் மன்னர் வாக்களிப்பதில்லை. அதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாது. அரச தலைவர் என்ற முறையில், அவர் அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நடுநிலையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற அமர்வுகளை முறையாகத் திறப்பது, பாராளுமன்றத்தில் இருந்து சட்டத்தை அங்கீகரிப்பது மற்றும் பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை நடத்துவது போன்றவை கடமையாகும்.

மேலும் செய்திகளுக்கு..Queen elizabeth: பிறப்பு முதல் இறப்பு வரை... எலிசபெத் ராணியின் காலத்தால் அழியாத வாழ்க்கை படங்கள்..

ஒவ்வொரு ஆண்டும், தேம்ஸ் நதியின் நீண்ட பகுதிகளில் அரச உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன, அங்கு ஸ்வான்ஸ் ஒரு பாரம்பரியத்தில் கணக்கிடப்படுகிறது. பிரிட்டிஷ் நீரில் உள்ள ஸ்டர்ஜன், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் அரச சிறப்புரிமை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. Burberry, Cadbury, Jaguar Cars, Land Rover, Samsung மற்றும் Waitrose பல்பொருள் அங்காடிகள் அரச வாரண்ட் உள்ள நிறுவனங்களில் அடங்கும்.

click me!