Asianet News TamilAsianet News Tamil

Kohinoor Diamond : ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைர கிரீடம்; அடுத்தது யாருக்கு?

இதுவரை ராணி எலிசபெத் அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை கமீலா சார்லஸ் அணிவார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் இரண்டாம் மனைவி கமீலா. இவர்தான் முறைப்படி, அந்த நாட்டின் ராணியாகிறார்.

Queen Elizabeth's Death: Who will wear Kohinoor Crown after Elizabeth II
Author
First Published Sep 9, 2022, 11:50 AM IST

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனது 96 வயதில், நேற்று இரவு பல்மோரல் அரண்மனையில் காலமானார். நீண்ட நாட்கள் பிரிட்டன் நாட்டை ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்குரியவர். இவரது தந்தைக்குப் பின்னர் பிரிட்டன் நாட்டின் ராணியாக எலிசபெத் முடி சூடி இருந்தார். 

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் விக்டோரியா ராணி மட்டுமே 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தார். இந்நிலையில் 2ம் எலிசபெத் அந்த சாதனையை முறியடித்து 70 ஆண்டுகள் இங்கிலாந்து அரண்மனை அரியாசனத்தை அலங்கரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Queen Elizabeth's Death: Who will wear Kohinoor Crown after Elizabeth II

பிரிட்டன் ராஜாங்கத்தை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத்தை கோஹினூர் வைர கிரீடம் அலங்கரித்து வந்தது. நடப்பாண்டின் துவக்கத்தில், தனது மூத்த மகன் சார்லஸின் மனைவி கமீலாவை தனக்கு வாரிசாக ராணி எலிசபெத் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து இதுவரை ராணி அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை கமீலா அணிவார்.

வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

இந்த வைர கிரீடம் 105.6 காரட் எடை கொண்ட வைரத்தால் ஆனது. 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பலரின் கைகளுக்கு மாறி தற்போது, பிரிட்டன் அரச வம்சத்திடம் உள்ளது. இந்தியாவும் பல முறை இந்த வைர கிரீடத்துக்கு உரிமை கோரி, பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. 1849 ஆம் ஆண்டில், பிரிட்டனுடன் பஞ்சாப் இணைக்கப்பட்ட போது, இந்த வைர கிரீடம் ராணி விக்டோரியா வசமானது. அன்றில் இருந்து இந்த வைர கிரீடம் பிரிட்டன் வசமாகி சட்ட சிக்கலுக்கும் உள்ளாகி வருகிறது. இந்தியா உள்பட நான்கு நாடுகள் இந்த வைர கிரீடத்தை உரிமை கோரி வருகின்றன.

Queen Elizabeth's Death: Who will wear Kohinoor Crown after Elizabeth II

கோஹினூர் வைரமானது 1937 ஆம் ஆண்டு 6ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில், ராணி எலிசபெத்துக்காக  உருவாக்கப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தில் பதியப்பட்டுள்ளது. இது லண்டன் டவரில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த இந்த வைர கிரீடம் மன்னராக சார்லஸ் மகுடம் சூடும்போது, கமீலாவை அலங்கரிக்கும் என்று பிரிட்டன் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Queen Elizabeth's Death: Who will wear Kohinoor Crown after Elizabeth II

13ஆம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்த சுரங்கத்தில் கோஹினூர் வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சிலர் மறுத்து வருகின்றனர். கோஹினூர் வைரத்தின் வரலாற்றை பார்க்கும்போது, அப்போது இந்தியாவில் எங்குமே வைரம் வெட்டி எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 1720 ஆம் ஆண்டுகளில் முதன் முதலில் பிரேசில் நாட்டில் தான் முதல் வைர சுரங்கம் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

Queen Elizabeth: ராணி எலிசபெத் மறைவு!10 நாள் துக்கம் அனுசரிப்பு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி.!

குண்டூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே அமைந்திருந்த ஆற்றின் கரையோரத்தில் கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த வைரம் பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் இருந்துள்ளது. அதேசமயம், வெள்ளைக் கல்லும் இருந்துள்ளது. இது பிரகாசமான ஒளியை வீசியுள்ளது. இன்றும் இந்த வைர கிரீடம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு இதற்கு கோல்கொண்டா வைரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைர கிரீடத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் இருக்கும் என்று அறியப்படுகிறது. இந்த வைரம் தோண்டி எடுக்கப்பட்டபோது அதிக எடையுடன் இருந்ததாகவும், பின்னர் கைகள் மாறும்போது, சுரண்டி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios