Queen Elizabeth: ராணி எலிசபெத் மறைவு!10 நாள் துக்கம் அனுசரிப்பு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி.!
எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. 70 ஆண்டுகள் இங்கிலாந்தை சிறப்பாக ஆட்சி செய்தார்.
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் உடல் வைக்கப்படவுள்ளது
எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. 70 ஆண்டுகள் இங்கிலாந்தை சிறப்பாக ஆட்சி செய்தார்.
இதையும் படிங்க;- ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் நாட்டின் அடுத்த மன்னர் இவர்தான்..!
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு எலிசபெத்துக்கு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க;- வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?