Asianet News TamilAsianet News Tamil

வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

1997-ல் கமல்ஹாசனுடன் மருதநாயகம் படத் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞருடன் எலிசபெத் ராணி பங்கேற்றார். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வந்த எலிசபெத் ராணி மருதநாயகம் படத் தொடக்க விழாவில் 20 நிமிடங்கள் பங்கேற்றார்.

Queen Elizabeth II Biggest achievements of the world second-longest reigning monarch
Author
First Published Sep 9, 2022, 7:51 AM IST

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலமானார். இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் விக்டோரியா ராணி மட்டுமே 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தார். இந்நிலையில் 2ம் எலிசபெத் அந்த சாதனையை முறியடித்து 70 ஆண்டுகள் இங்கிலாந்து அரண்மனை அரியாசனத்தை அலங்கரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க;- பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!!

Queen Elizabeth II Biggest achievements of the world second-longest reigning monarch

 1947 ல் 2ம் எலிசபெத், பிலிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் 2ம் எலிசபெத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவரது கணவர் பிலிப் 99 வயதில் காலமானார். 

Queen Elizabeth II Biggest achievements of the world second-longest reigning monarch

இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காலமானார். நீண்ட ஆண்டுகளாக இங்கிலாந்தை ஆட்சி செய்த 2வது ராணி என்ற பெருமைக்குரியவர். 1953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு இவர் ராணியாக பொறுப்பேற்று சுமார் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 14 பிரதமர்கள் இவர் அரசியாக இருந்த காலத்தில் ஆட்சி செய்தனர். இவர் 16 நாடுகளின் ராணியாகவும் இருந்துள்ளார். 

இதையும் படிங்க;-  15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த ராணி எலிசபெத்; 15வது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார் லிஸ் டிரஸ்!!

Queen Elizabeth II Biggest achievements of the world second-longest reigning monarch

1997-ல் கமல்ஹாசனுடன் மருதநாயகம் படத் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞருடன் எலிசபெத் ராணி பங்கேற்றார். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வந்த எலிசபெத் ராணி மருதநாயகம் படத் தொடக்க விழாவில் 20 நிமிடங்கள் பங்கேற்றார்.

இதையும் படிங்க;- ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார் சார்லஸ்; யார் இவர்?

Follow Us:
Download App:
  • android
  • ios