15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த சிறப்பை பெற்ற ராணி எலிசபெத்..!
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். அதில் 15வது பிரதமர் எனும் சிறப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். அதில் 15வது பிரதமர் எனும் சிறப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் தான் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது உடல்நிலை மோசமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்தது. 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த போதும் அவர், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!!
அதைத் தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார். இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர் காலமானார். முன்னதாக இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அவரது மகள் எலிசபெத் அந்த நாட்டின் ராணியானார். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். அதன்பின் சார் ஆண்டனி ஈடன் தொடங்கி போரீஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி இருக்கின்றார்.
இதையும் படிங்க: ஆணுறுப்பின் சைஸை அளக்க USB கேபிளை உள்ளே சொருகிய சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
தற்போது இங்கிலாந்து பிரதமராக லீஸ் டிரஸ்ஸை ராணி இரண்டாம் எலிசபெத் நியமனம் செய்திருக்கின்றார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15வது பிரதமர் எனும் சிறப்பை பெறுகின்றார். மேலும் ராணி எலிசபெத் பதவி காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்கள் மார்கரெட், தாட்ச்சர்,தெரசா மே போன்றவர்கள் ஆவர். மேலும் 11 பிரதமர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர், 4 பேர் மற்றும் தொழில் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை இரண்டாம் எலிசபெத் பதவியேற்று வைத்துள்ளார்.
ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார் சார்லஸ்; யார் இவர்?