யம்மாடியோவ்....KGF 2 நாயகன் யாஷ்ஸின் சொத்து மதிப்பு தெரியுமா..? ராக்கி பாயின் வீடு மட்டும் இத்தனை கோடியாம்...

First Published May 4, 2022, 2:21 PM IST

KGF 2 Actor Yash: KGF 2 படம் மூலம் பிரபலமான கன்னட நடிகர் யாஷ், KGF 2 படத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்நிலையில், யாஷ்ஸின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

KGF 2

KGF 1 படத்திற்கு கிடைத்த பெறும் வரவேற்பை தொடர்ந்து, யாஷ் பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்துகிறது.

KGF 2

பான் இந்தியா படமான கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.

KGF 2

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமான பிரமாண்டமாக வெளியானது.

KGF 2

இந்த படத்தில், யாஸ்சுடன்  சேர்ந்து சஞ்சய் தத், ரவீனா டாண்டன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும்  சுமார் 10,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்ட கேஜிஎஃப் 2 வின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் மட்டும் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்தது. 

kgf2

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இதனால், யாஷ்ஸின் ரசிங்கர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். 

kgf2

கேஜிஎஃப் 2 படம் அஜித், விஜய் படங்களின் வசூல் சாதனைகளை பீட் பண்ணும் வகையில், படம் தமிழகத்தில் மட்டும் இன்னும் சில தினங்களில் படம் ரூ. 100 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.  

kgf2

மேலும், கேஜிஎஃப் 2 படம் வருகிற மே 6 ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. இது வசூல் வேட்டையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

kgf2

இந்நிலையில், யாஷ்ஸின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மாஸ் நாயகனாக வலம் வரும் யாஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி வரை வரும் என கணிக்கப்படுகிறது.
 

kgf2

இதில் இவர் வசிக்கும் வீடு மட்டும் - ரூ 6 கோடி என்று சொல்லப்படுகிறது. மேலும், விளம்பர மாடலிங்களுக்கு ரூ 60 லட்சம் பெறுவதாகவும். Kgf ரிலீசுக்கு முன்பு சம்பளம் ரூ 4 முதல் 5 கோடி பெற்று வந்த நிலையில் தற்போது, Kgf 2 படத்திற்காக யாஷ் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

kgf

மேலும், கார்களின் மதிப்பு ரூ 3. 5 கோடி என்று தகவல் வெளிவந்துள்ளது. மாதம் வருமானம் ரூ 55 முதல் ரூ 60 லட்சமாகும். அதுமட்டுமின்று, ஏழைகளுக்கு  உதவுவது, வரி கட்டுவது போன்ற விஷயங்களில் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறாராம்.

click me!