டெல்லி காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் தேவேந்திர யாதவுக்கு அஜய் மாக்கன் வாழ்த்து தெரிவித்து, கோஷ்டி பூசலில் ஈடுபடுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸின் கூட்டணி மற்றும் ராஜ்குமார் சவுகானுக்கு சீட் வழங்காததால் கோபமடைந்த டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். லவ்லி ராஜினாமா செய்ததையடுத்து, மாநிலத்தின் இடைக்காலத் தலைவராக தேவேந்திர யாதவை உயர்மட்டத் தலைமை பரிந்துரைத்துள்ளது.
தேவேந்திர யாதவ் நியமனம் குறித்து ஆலோசனை வழங்கும் போது அஜய் மாக்கன் கோஷ்டி பூசலில் ஈடுபடுவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவேந்திர யாதவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
In politics, things don't always go our way. Sometimes, our desires remain unfulfilled, our voices unheard—yet, does this justify undermining the very organisation that defines our political identity? Should we repeatedly inflict harm on our organisation for personal gains?… pic.twitter.com/0T489mKBh7
— Ajay Maken (@ajaymaken)
undefined
கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார் அஜய் மாக்கன். அரசியலில் விஷயங்கள் எப்போதும் நம் வழியில் செல்வதில்லை. சில சமயங்களில், நம் ஆசைகள் நிறைவேறாமல் இருக்கும், நம் குரல்கள் கேட்கப்படாமல் போகும். ஆயினும்கூட, இது நமது அரசியல் அடையாளத்தை வரையறுக்கும் அமைப்பை பலவீனப்படுத்துவதை நியாயப்படுத்துகிறதா? தனிப்பட்ட ஆதாயத்திற்காக நமது கட்சிக்கு மீண்டும் மீண்டும் தீங்கு செய்ய வேண்டுமா?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “மேற்கூறிய பாதையை ஒருபோதும் பின்பற்றாத சிப்பாய், காங்கிரஸின் இலட்சியங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., கவுன்சிலர், அடிமட்ட ஊழியர், சிறந்த அமைப்பாளர் எனப் பின்னணி கொண்ட தேவேந்திர யாதவ், இப்போது டெல்லி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக உள்ளார். அவர் சரியான தேர்வு. அவரின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.