கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி, மக்களுடன் செல்பி எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By SG Balan  |  First Published Apr 30, 2024, 10:17 PM IST

கொடைக்கானலில் கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோல்ஃப் விளையாடியதைக் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முதல்வர் திரும்பிச் செல்வதற்கு முன் அனைவரிடமும் வணக்கம் சொல்லி விடைபெற்றார். செல்ஃபி எடுக்க விரும்பியவர்களுடன் சேர்ந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


கோடையில் ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கோல்ஃப் மைதானத்துக்குச் சென்று விளையாடினார். அப்போது அங்கு வந்த மக்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

5 நாள் பயணமாக கொடைக்கானலுக்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர். குடும்பத்துடன் தனியார் விடுதியில் தங்கியுள்ள முதல்வர் மே 3ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்குகிறார். 4ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

போலி கையெழுத்து போட்டு பெற்றோரின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடு சென்ற மகன்!

இதனால், கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் செல்ல இருக்கும் கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வுக்காக வந்திருப்பதால் முதல்வரை கட்சியினர் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார்.  அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோல்ஃப் விளையாடியதைக் கண்டு ரசித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் மைதானத்தில் இருந்து திரும்பிச் செல்வதற்கு முன் சுற்றுலாப் பயணிகள், கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் நலம் விசாரித்து, அனைவரிடமும் வணக்கம் சொல்லி விடைபெற்றார். செல்ஃபி எடுக்க விரும்பியவர்களுடன் சேர்ந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கோடையை கூலாக்கும் சியோமியின் மிஜியா வெர்ட்டிகிள் ஏசி! எந்த இடத்திலும் வைத்து பயன்படுத்தலாம்!

click me!