டாடா நாயகனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... வெற்றிமாறன் படத்தில் நயன்தாரா உடன் நடிக்கும் கவின்..!

First Published Feb 16, 2024, 1:56 PM IST

டாடா படத்தின் வெற்றிக்கு பின் அசுர வளர்ச்சி கண்டுள்ள நடிகர் கவின், அடுத்ததாக வெற்றிமாறன் மற்றும் நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

Kavin, Nayanthara

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் கவின். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கணேஷ் பாபு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ஸ்டார் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் கவின்.

Kavin

இப்படத்தை இளன் இயக்குகிறார். இவர் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியவர் ஆவார். முதலில் ஸ்டார் படத்தை ஹரிஷ் கல்யாணை வைத்து தான் இயக்குவதாக இருந்தார் இளன். அவரை வைத்து போட்டோஷூட்டெல்லாம் நடத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டனர். ஆனால் திடீரென அவர் இப்படத்தில் இருந்து விலகியதால் கவினை ஹீரோவாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... மனைவி மோனிகா டேவிட் உடன் காத்துவாக்குல காதல் செய்த கவின் - வைரலாகும் Valentines Day போட்டோஸ்

Kavin Next Movie

ஸ்டார் படத்தை தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் கவின். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால், இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், தற்போது கவின் நடிக்க உள்ள மேலும் ஒரு படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

vetrimaaran, Kavin, Nayanthara

அதன்படி அந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ் ரூட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தை விக்ரனன் அசோகன் என்பவர் இயக்க உள்ளார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... துருவ நட்சத்திரத்தை கிடப்பில் போட்டுவிட்டு; ஜோசுவா படத்தை தூசிதட்டி எடுத்த கவுதம் மேனன்- ரிலீஸ் தேதி அறிவிப்பு

click me!