Parenting Tips : பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளிடம் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் வழிகள் இதோ!

First Published May 8, 2024, 4:12 PM IST

இந்த பதிவில் உங்கள் குழந்தைகளிடம் நேர்மறையான சிந்தனையை வளர்க்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

குழந்தைகளின் நேர்மறையான சிந்தனை சக்தி அவர்களின் ஒட்டுமொத்த யோகா நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வாழ்க்கையில் சிறத்தன்மையையும், வெற்றியையும் தருகிறது. அதேபோல் உங்கள் குழந்தைகளிடம் நேர்மறையான சிந்தனையை வளர்க்க சில வழிகள் இங்கே உள்ளன. அவை..

தொடர்பு: குழந்தைகள் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்காக அதற்கான சூழ்நிலையையும் இடத்தையும் உருவாக்குங்கள். இது அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொண்டு கேட்கும் நல்ல மனப்பான்மை அவர்களுக்குள் விதைக்கிறது.

சாதகமான கருத்துக்கள்: உங்கள் பிள்ளைகள் நேர்மறையான சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தும் போது அவர்களை பாராட்டுங்கள். உங்களிடம் இருந்து வருகின்ற இந்த நேர்மறையான கருத்து குழந்தைகளிடம் இதே போன்று பழக்கங்களை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

நன்றி உணர்வை பயிற்சி செய்ய உதவுங்கள்: நன்றி உணர்வு நாட்குறிப்பை எழுதும் பழக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வளர்க்கச் செய்யுங்கள் அல்லது நன்றியை வெளிப்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள். இது அவர்களை எப்போதும் நல்ல விஷயங்களைப் பற்றிய சிந்திக்க வைக்க பெரிதும் உதவுகிறது.

எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்: உங்கள் குழந்தைகள் பார்க்கும் ஊடகங்களில் கவனம் செலுத்துங்கள். அதில் எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருக்க அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். தீங்கு விளைவிக்கும் அல்லது மோசமான விஷயங்களை பற்றி அவர்களுடன் கலந்துரையாடுங்கள். மேலும் அதிலிருக்கும் தீமைகளை அவர்களுக்கு விளக்குங்கள்.

சுய பாதுகாப்பு:குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு பற்றியும் கற்றுக்கொடுங்கள். தவறு செய்வது சகஜம். ஆனால், அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது முக்கியம் என்பதையும், அவற்றைப் பற்றிய எதிர்மறையான சிந்தனை அவர்கள் வளர உதவாது என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : பிறந்த குழந்தையின் கண்களில் மை வைப்பது நல்லதா..? உண்மையும் கட்டுக்கதைகளும் இதோ!

திறனை புரிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளுக்கு அவர்களின் திறன்களையும் திறமைகளையும் புரிய வையுங்கள். தடைகளை கடத்த தங்கள் வலிமையே பயன்படுத்த குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைக்கு நீச்சல் சொல்லி கொடுக்கீங்களா..? அப்ப 'இந்த' விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

பொறுமை: வாழ்க்கையில் பொறுமை மிகவும் அவசியம். இது பழகுவதற்கு சிறிது நேரம் ஆகலாம். இருப்பினும், பொறுமையை பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாள் முழுதும் பல வழியில் உதவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!