Kanguva Story: கங்குவா படத்தின் கதை இதுவா? ரசிகர்களை மெர்சலாக்க காத்திருக்கும் சூர்யா.! தீயாய் பரவும் தகவல்..!

First Published Mar 23, 2024, 8:56 AM IST

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் கதைக்களம் குறித்த தகவல் ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனரான இருக்கும், சிறுத்தை சிவா, 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து...  முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'கங்குவா'. வரலாற்று கதையம்சம் கொண்ட காட்சிகளுடன், பேண்டஸி திரைப்படமாக இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார்.
 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை...  சுமார் 350 கோடி செலவில் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்து... போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Vijay Fans Meet: கேரள ரசிகர்களுடன் செல்ஃபி.. முத்தங்களை பறக்க விட்ட தளபதி! வேற லெவலுக்கு மாஸ் காட்டிய போட்டோ!

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி... ரசிகர்களை பிரமிக்க வைத்தது. மேலும் சூர்யாவும் - சிறுத்தை சிவாவும் மாஸ் சம்பவம் செய்ய காத்திருப்பதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதே போல் இப்படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் சுமார் 100 கோடிக்கு கைப்பற்றியதாகவும்  தகவலும் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது 'கங்குவா' படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது. நடிகர் சூர்யா 1700-களில் இருந்து வந்து, கற்காலத்தில் தன்னால் செய்து முடிக்க முடியாத ஒரு சம்பவத்தை... நிகழ்காலத்தில் எப்படி முடித்து காட்டுகிறார் என்பதே இப்படத்தின் ஒன் லைன். 1700-களில் இருந்து சூர்யா டைம் ட்ராவல் செய்வது எப்படி சாத்தியமாகிறது. அதற்காக சூர்யா எதுக்கும் ரிஸ்க்... என யாரும் எதிர்பாராத கதையாக இப்படம் உருவாகியுள்ளதாம். இப்போது வெளியாகியுள்ள இந்த தகவலே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chiyaan 62 Update: போட்ரா வெடிய.. சீயான் 62 படப்பிடிப்பு எப்போது துவக்கம்? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
 

click me!