Horoscope Today 2022: ஜூன் 2ம் தேதி கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்...இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு

First Published Jun 2, 2022, 5:00 AM IST

Horoscope Today- Indriya Rasipalan 2 may 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2022 ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து வைத்து கொள்ள்ளுங்கள்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் சகித்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் அக்கறை அதிகரிக்கும்.ஆரோக்கியம், தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை. 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. 
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கக்கூடிய மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த காரியத்தில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். எதிலும், நிதானம் அவசியம். எதிலும்,  பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.  

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும் இறைவழிபாட்டின் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணிவு தேவை. தலை கனத்துடன் செயல்பட்டால் உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
 

 கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எடுத்த முடிவுகளில் சாதக பலன் பெறலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் சுறுசுறுப்பு தேவை. தலைபாரம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிவுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக் கவலை அகலும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் சரியாக அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆரோக்யம் மேம்படும்

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.  குடும்பத்தில் பெரியவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பல விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் லட்சியத்தை நோக்கி பயணியுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் உண்டு. 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சியை கை விடாமல் இருப்பது நல்லது. மனதில் இருக்கும் ஒருவிதமான அச்ச உணர்வு நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். 

rasi palan

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சேவை மற்றவர்களுக்கு தேவையாக இருக்கக்கூடும். சமுதாய அக்கறையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெற்றோர்களுடைய ஆதரவு தேவை. தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புகழ் போதை இருக்கக் கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். மன உளைச்சல் அதிகரிக்கும்.
 

rasi palan

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுக்கு ஏற்ப வரவுகளும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச்செய்தி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். உடல் சோர்வு அதிகரிக்கும் 
 

rasi palan


 மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதி பல நன்மைகளை கொடுக்கக்கூடியதாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே தேவை அறிந்து நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வேதத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணலாம்.

click me!