நல்ல வேள அவர் நடிக்கல... கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவின் தந்தையா?

First Published May 5, 2024, 11:45 AM IST

கில்லி படத்தில் முத்துப்பாண்டி என்கிற கலாட்டா வில்லனாக நடித்து மாஸ் காட்டிய பிரகாஷ் ராஜின் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் பற்றி பார்க்கலாம்.

Ghilli Movie

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படம் தான் கில்லி. கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை தரணி இயக்கி இருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படத்திற்கு வித்யாசகர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் அடித்தன. கில்லி திரைப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஆனால் அப்படத்தை மிஞ்சும் அளவுக்கு வசூலை வாரிக்குவித்தது கில்லி.

Ghilli Vijay

நடிகர் விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்த்தியது கில்லி திரைப்படம் தான். தமிழ் சினிமாவில் முதன்முறையாக ரூ.50 கோடி வசூல் சாதனை நிகழ்ச்சிய நடிகர் என்கிற சாதனையை படைத்தது விஜய் தான். கில்லி படம் மூலம் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதற்கு முன்னர் வரை ரஜினியின் பாட்ஷா திரைப்படம் ரூ.44 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை தகர்த்தெறிந்தது விஜய்யின் கில்லி.

ghilli Re Release

இத்தகைய மகத்தான சாதனை படைத்த கில்லி திரைப்படம் இன்று 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரீ-ரிலீஸில் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.30 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. கில்லி படத்தின் வெற்றிக்கு விஜய் மட்டுமல்ல அப்படத்தில் முத்துப்பாண்டி என்கிற மாஸ் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜும் ஒரு காரணம். அவர் செல்லம் என அழைப்பது வேறலெவலில் ரீச் ஆனதோடு, அதுவே அவருக்கு ஒரு அடையாளமாகவும் மாறியது.

இதையும் படியுங்கள்... முதல் நாளை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அரண்மனை 4 - 2 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

Vijay, Trisha

இப்படி ஒரு அடையாளத்தை கொடுத்த அந்த கேரக்டரில் அவர் முதல் சாய்ஸ் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் உண்மை. கில்லி படத்தில் முத்துப்பாண்டியாக முதலில் நடிக்க இருந்தது பிரகாஷ் ராஜ் இல்லை. ஏனெனில் ஒக்கடு படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்ததால் அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஐடியாவில் ஆடிஷன் நடத்தினாராம் தரணி.

Ghilli Movie Prakash Raj

கிட்டத்தட்ட 8 பேரிடம் இதற்கான ஆடிஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் ஒருவர் தான் நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என தரணி விரும்பினாராம். ஆனால் அவர் நோ சொன்னதால் வேறு வழியின்று மீண்டும் பிரகாஷ் ராஜிடம் போய் கதை சொல்லி இருக்கிறார். கதை கேட்டு பிரகாஷ் ராஜ் பிரம்மித்து போன பின்னர் தான் இது ஒக்கடு படத்தின் ரீமேக் என்பதை கூறி இருக்கிறார் தரணி.

thiyagarajan rejected Ghilli Movie

ஏனெனில் ஒக்கடு படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் கில்லி படத்தின் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து எடுத்திருந்தார் பரணி. அவரின் அந்த உழைப்பு தான் அப்படம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம். இதைப்பார்க்கும் போது நல்ல வேளை முத்துப்பாண்டியாக தியாகராஜன் நடிக்க வில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் அந்த அளவுக்கு அந்த கேரக்டரை தன்னைவிட வேறு யாராலும் செய்துவிட முடியாது என்கிற ரேஞ்சுக்கு தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பிரகாஷ் ராஜ்.

இதையும் படியுங்கள்...  CWC 5 : குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நாஞ்சில் விஜயன்... அவரது இடத்தை Replace செய்யப்போவது இந்த நடிகையா?

click me!