தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர்கள் காரில் கஞ்சா வைத்திருந்தாகவும், பெண் போலீசாரை அவதூறாக பேசியதாகவும் தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சவுக்கு சங்கர் கூட்டாளிகள் கைது
தமிழக காவல்துறையில் உளவுத்துறை பணிகள் ஈடுபட்டிருந்த சங்கர், அரசியல்வாதிகளின் தொலைபேசியை பதிவு செய்து வெளியிட்ட வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வந்தார். மேலும் பல்வேறு youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வந்தார். இந்த நிலையில் பெண் காவலர்களை மிகவும் மோசமாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் உள்ளிட்ட சவுக்கு சங்கர் மீது 20க்கும் மேற்பட்ட புகார்கள் பல்வேறு மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்டது.
undefined
பெண் காவலர்கள் மீது அவதூறு
இதனை தொடர்ந்து சவுக்கு மீடியாவை காவல்துறையினர் சுற்றி வளைக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக சவுக்கு சங்கருடன் இருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கைது செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இந்த நிலையில் யூடியூப்பரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தேனியில் பழனிசெட்டிபட்டி தனியார் தங்கும் விடுதியில் வைத்து நேற்று அதிகாலை கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடன் இருந்த வாகன ஓட்டுநர் ராம் பிரபு மற்றும் அவருடைய நண்பர் ராஜரத்தினம் இருவரும் சவுக்கு சங்கரை கைது செய்யும்போது காவல்துறையினரிடம் தகாத வார்த்தை பேசியும் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
மேலும் பெண் காவல்துறை அதிகாரியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்த சவுக்கு சங்கர் வாகனத்தை போலீசார் வட்டாச்சியர் முன்னிலையில் சோதனை செய்த போது அவரது வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலமும் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக சவுக்கு சங்கர் கூட்டாளிகளையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் நண்பர்கள் கைது
அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தாங்கள் பயன்படுத்துவதற்காக 400 கிராம் கஞ்சாவினை வாகனத்தில் வைத்திருந்ததாகவும், விசேஷ நிகழ்ச்சி ஒன்றிற்கு பங்கேற்பதற்காக தேனி வந்துவிட்டு மறுநாள் மூணாறுக்கு செல்ல இருந்ததாகவும் கூறியதாகவும் முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரின் நண்பர்கள் மீது காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.