Latest Videos

காதலியை அறிமுகப்படுத்த போகிறாரா விஜய் தேவரகொண்டா.. குஷி நாயகனின் குண்டக்க மண்டக்க பதிவால் கன்பியூஸ் ஆன ரசிகாஸ்

First Published Aug 30, 2023, 9:36 AM IST

பெண் ஒருவரின் கையை பிடித்தபடி நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து ரசிகர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

Vijay Deverakonda

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு சாக்லேட் பாய் அந்தஸ்தை கொடுத்தது. இதையடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிய விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லிகர் என்கிற பான் இந்தியா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

Vijay Deverakonda, samantha

இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது குஷி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். குஷி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... கொரோனா குமார் படத்தில் நடிக்க காசு வாங்கிட்டு டிமிக்கி கொடுத்த சிம்பு... அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

Vijay Deverakonda Insta post

இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கி உள்ளது. அந்த பதிவில், நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே ஸ்பெஷலானது விரைவில் அறிவிக்கிறேன் என குறிப்பிட்டு ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதனால் அந்த பெண் யாராக இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறாரா அல்லது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறாரா என பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இன்று மாலை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாட உள்ளதாகவும் விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார். அதனால் அந்தப் பெண் யார் என்கிற விவரத்தை இன்று மாலை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த நடிகை கீர்த்தி சுரேஷின் அடிபொலியான ஓணம் போட்டோஸ் இதோ

click me!