Doctor : மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேர் விடுதலை - முழு விவரம்!

Jun 15, 2024, 10:49 PM IST

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபலமான நரம்பியல் மருத்துவர் தான் சுப்பையா. கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலத்தகராறு காரணமாக இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பொன்னுசாமி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் வழக்கறிஞர் பார்சல், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னுசாமியின் மனைவி மேரி மற்றும் ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 

தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், போலீசார் திறப்பு விசாரணையில் குற்றவாளிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கான தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு இந்த ஒன்பது பேரும் தங்களுடைய மரண தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து குறிப்பிடத்தக்கது.