
குளிர்ந்த வானிலை இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை வந்துவிடும். இந்த சமயத்தில் கசாயங்களை அவ்வப்போது குடியுங்கள். அதுபோல சூடான மற்றும் புதிய உணவை மட்டுமே சாப்பிடுங்கள். உடலை எப்போதும் வெப்பமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.
அந்தவகையில், குளிர்காலத்தில் உங்களது இதயம் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எந்த நேரத்திலும் எது எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு சில உணவுகளை சாப்பிடாமல் அதை தவிர்ப்பது நல்லது. எனவே குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?
குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சுத்திகரிக்கப்பட்ட மாவு உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட மாவு என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மைதா தான். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே குளிர்காலத்தில் மைதாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா, கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டாம். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு கெடுத்துவிடும்.
செயற்கையான இனிப்புகள்
இந்த மாதிரியான இனிப்புகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே ஆபத்தானது. இது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே குளிர்காலத்தில் செயற்கை இனிப்பு பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில், பல உடல்நிலை பிரச்சினைகள் வரும்.
வெள்ளை ரொட்டி & பாஸ்தா
குளிர்காலத்தில் வெள்ளேரொட்டி மற்றும் பாஸ்தா சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஒரு அறிக்கையின் படி, இவை இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இது தவிர இது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால் இது வகை 1 மற்றும் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது.
சோடா
சோடாவில் பெரும்பாலும் செயற்கை இனிப்புகள் தான் அதிகமாக இருக்கும். மேலும் இதில் பல்வேறு ரசாயன கூறுகள் மற்றும் காப்பின் இருக்கிறது. எனவே இதை குளிர்காலத்தில் குடித்தால் இதயத்தில் பிரச்சனை ஏற்படும்.
இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நிபுணர்களின் கருத்துப்படி சிவப்பிரச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குளிர் காலத்தில் பலவகையான பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். ஏனெனில் இவை செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும். பொதுவாக குளிர்காலத்தில் உடல் செயல்பாடுகளை அதிகம் செய்யமாட்டோம். இது மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் பருமனையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் இதயம் பாதிக்கப்படும். எனவே குளிர்காலத்தில் இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.
இதையும் படிங்க: தினமும் வாக்கிங் போறதுல 'இப்படி' ஒரு நன்மையா? இதய நோய் கூட வராது தெரியுமா?