
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் நம்மில் பெரும்பாலானோர் தங்களது நடைமுறையை அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்வார்கள். அதாவது சிலர் இந்த பருவ நிலைக்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சிலரோ தூங்குவதை தான் அதிகம் விரும்புவார்கள்.
ஆனாலும், இந்த குளிர்காலத்தில் உங்களது உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், உங்களது நாளை சரியாக தொடங்க வேண்டும். அதாவது குளிர்காலத்தில் சில காலை பழக்கங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்களது உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். எனவே இந்த குளிர்காலத்தில் நீங்கள் உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்க இந்த 7 பழக்கங்களை பின்பற்றுங்கள்.
இதையும் படிங்க: இந்த ஒரு 'ரூல்ஸ்' கட்டாயம்.. அப்ப தான் 'வாக்கிங்' போறதோட முழுபலன் கிடைக்கும்!!
குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய 7 பழக்கங்கள்:
1. நீரேற்றுத்துடன் நாளை தொடங்கு
குளிர்காலத்தில் நீரேற்றுமாக இருப்பது மிகவும் அவசியம். ஆனால் நாம் அதை அடிக்கடி மறந்து விடுகிறோம். இதுதவிர, அதிக தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமே என்று எண்ணி பலர் தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் நீரிழப்பு பிரச்சினை தான் வரும். ஆனால் ஆற்றல் மட்டங்களை பராமரிக்கவும் வளர்ச்சியை மாற்றட்டும் மேம்படுத்தவும் மன தெளிவை ஆதரிக்கவும் குளிர்காலத்தில் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம்.
இதற்கு ஒரு கிளாஸ் சூடான நீருடன் உங்களுக்கு நாளை தொடங்குங்கள். வேண்டுமானால் இதில் நீங்கள் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இந்த ஒரு எளிய பழக்கம் உங்களது வளர்ச்சியை மாற்றத்தை தொடங்கும் மற்றும் நாள் முழுவதும் நீங்கள் நீரேற்றத்துடன் இருக்க உதவும்.
இதையும் படிங்க: அதிகாலை நடப்பது நன்மைனு நினைச்சிருப்பீங்க.. ஆனா 'இத்தனை' நிமிஷம் தான் நடக்கனும் தெரியுமா?
2. லேசான உடற்பயிற்சி
குளிர்காலத்தில் அதிகாலை படுக்கையில் இருந்து எழ சிரமமாக இருக்கும். இன்னும் உறங்க வேண்டும் என்று தூண்டும். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது மந்த நிலைக்கு வழிவகுக்கும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில். எனவே நீங்கள் அதிகாலையில் எழுந்து உங்களது தசைகளை தளர்த்த சில லேசான பயிற்சிகளை செய்ய சுமார் 15 நிமிடம் ஒதுக்குங்கள். நீங்கள் செய்யும் சில எளிய உடற்பயிற்சி உங்களது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உங்களது உடலை வரும் நாளைக்கு தயார்படுத்தும். இது தவிர உங்களது மனநிலையை ஆரோக்கியமாக வைக்கவும், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.
3. சீரான காலை உணவு
குளிர்காலத்தில் கனமான, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நன்றாக இருந்தாலும், நாளின் பிற்பகுதியில் அவை ஆற்றல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே குளிர்காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சமசீரான உணவை சாப்பிடுங்கள். இதற்கு நீங்கள் கீரைகள், புரோட்டின் பவுடர், சியா விதைகள், நட்ஸ்கள், ஓட்ஸ் மற்றும் பெர்ரிகள் போன்றவை எடுத்துக்கொள்ளுங்கள்.
4. ஆழந்த சுவாசப் பயிற்சி
குளிர்காலத்தில் தியானம் ஆல் தி சுவாச பயிற்சி போன்றவற்றை செய்து நாளை தொடங்கினால் உங்களது மனம் தெளிவாகவும் இருக்கும்.. இது தவிர மன அழுத்தம் குறையும் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். இதற்கு நீங்கள் சுமார் காலை 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பதட்டம் குறையும், உங்களது கவனம் மற்றும் மனநிலை மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
5. சூரிய ஒளி
குளிர்காலத்தில் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சூரிய ஒளி பற்றாக்குறை. இதனால் உங்களை குறைந்த மற்றும் சோர்வாக உணர வைக்கும். ஆனால் உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிப்பதில் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடல் மற்றும் மன நலனுக்கு மிகவும் அவசியம். எனவே உங்களால் முடிந்தால் காலையில் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் வெளியில் செலவிடுங்கள் இல்லையெனில் உங்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து வைக்கவும்.
6. முந்தின இரவு திட்டமிடுங்கள்
ஒழுங்கற்ற காலை தேவையற்ற மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதனால் உடல் மற்றும் மனநலம் பெரிதும் பாதிக்கப்படும். இதற்கு நீங்கள் முந்தின இரவை திட்டமிடுவதன் மூலம், உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்க முடியும். எனவே இரவு தூங்கும் முன் அடுத்த நாளுக்கான இலக்குகளை நிர்ணயிக்கவும்.
7. நல்ல தூக்கம் அவசியம்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் கவனிக்கப்படாத பழக்கங்களில் ஒன்று இரவு தூக்கம். குளிர்காலத்தில் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம் ஒவ்வொருவரும் 7-9 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். இதற்கு நீங்கள் உறங்கும் முன் காஃபின் குடிப்பதைத் தவிர்க்கவும் மற்றும் டிவி, மொபைல் போன் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.