பொதுவாகவே பலரும் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் வறண்ட காற்று தான். இதனால் தலைமுடி வறட்சியாகி, உச்சந்தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசை நீங்கி பொடுகு உருவாகிறது.
25
Winter Hair Mask For Dandruff In Tamil
ஆனால் சில இயற்கையான ஹேர் மாஸ்குகளை போடுவதன் மூலம் பொடுகு பிரச்சனை ஏற்படுவதை முற்றிலும் குறைக்கலாம். எனவே குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனையை போக்க என்னென்ன ஹேர் மாஸ்குகளை போட வேண்டும் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கற்றாழையில் நீர்த்தன்மை உள்ளது மற்றும் தேயிலை மர எண்ணையில் பூஞ்சை எதிர்ப்பு பண்பு உள்ளது. எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தினால் குளிர் காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை சுலபமாக குறைத்து விடலாம். இதற்கு கற்றாழை ஜெல்லில் சில துளிகள் தேயிலை மர எண்ணெயில் கலந்து உச்சந்தலையில் தடவி சுமார் 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்பேக் பொடுகை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்லும்.
45
Winter Hair Mask For Dandruff In Tamil
தேங்காய் எண்ணெய் & எலுமிச்சை சாறு:
தேங்காய் எண்ணெய் தலைமுடியை நீளமாக வளரவும், பளபளக்கச் செய்யவும் உதவுகிறது. அதுபோல எலுமிச்சை சாற்றில் இருக்கும் அமிலத்தன்மை உச்ச தலையில் இருக்கும் பிஹெச் அளவை சமன் செய்து, பொடுகை போக்க உதவுகிறது. எனவே இவை இரண்டையும் கலந்து உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
வாழைப்பழம் தலைமுடியை பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது. ஆலிவ் ஆயில் தலைமுடி வறட்சியை போக்கும். இவற்றைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயாரிக்க வாழைப்பழத்தில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு பிசைந்து அதை தலைமுடியில் தடவி 15 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை குறைக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது