Dandruff remedies: பொடுகுத்தொல்லை இனி இல்லவே இல்லை; சிம்பிள் வீட்டு டிப்ஸ்!!
தலைமுடியின் தலையாய பிரச்சினை பொடுகுத் தொல்லை. பலருக்கும் இந்த தொல்லை இருக்கிறது.
தலையில் பொடுகு வருவதற்கு ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழல், மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. இயற்கை பொருட்களை வைத்தே பொடுகு தொல்லையை தீர்க்கலாம்.
வேப்பிலை:
வேப்பிலை அற்புதமான இயற்கை மருந்து. வேப்பிலையை அரைத்து தலையில் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். பாக்டீரியா, பூஞ்சையை போக்கும் சக்தி வேப்பிலைக்கு உள்ளது. வேப்பிலை சிறிதளவு தலையில் ஊறவைத்து அலசினால் பொடுகு தொல்லை நீங்கும்.
காலில் உள்ள கருமை நீங்க வேண்டுமா..? உடனே 'இந்த' டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
எலுமிச்சை:
தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஊற வைக்க வேண்டும். தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய்யும், எலுமிச்சை பொடுகுக்கும் சிறந்தது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழிக்கிறது. இதனால் அரிப்பு குறையும்.
கற்றாழை:
கற்றாழை தலைமுடிக்கு சிறந்த மூலிகை. கற்றாழை ஜெல் எடுத்து தலைமுடியில் தடவி ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் பொடுகுக்கு ஒரு சிறந்த தீர்வு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஆலிவ் எண்ணெய் தலைமுடியின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறட்சியை நீக்கும். பொடுகு அடியோடு நீங்கும்.
தயிர்:
தயிர் பொடுகு தொல்லையை நீக்கும். தலைமுடியில் தயிரை 10 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். சளி தொந்தரவு இருப்பவர்கள் தயிர் பூசி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
பச்சை பாலில் இந்த மூணுல ஏதாவது ஒன்னு கலந்து யூஸ் பண்ணுங்க.. முகம் பளபளப்பாகுமாம்..!