Wooden Door Cleaning Tips In Tamil
பொதுவாக ஒவ்வொருவரும் தங்கள் வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வீடு சுத்தமாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாகவும், வீட்டிற்கு வருபவர்களின் கண்களுக்கு அவரும் விதமாகவும் இருக்கும். வீட்டை சுத்தம் செய்பவர்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடுவார்கள்.
இதையும் படிங்க: தரையை துடைச்ச அப்பறம் 'மாப்' அழுக்கா மாறிடுதா? ஈஸியா மாப்பை கிளீன் பண்ண டிப்ஸ்!!
Wooden Door Cleaning Tips In Tamil
ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மரக்கதவை சுத்தம் செய்ய மறந்து விடுகிறார்கள். இன்னும் சிலரோ அதை சுத்தம் செய்வதற்கு ரொம்பவே கஷ்டம் என்று அப்படியே விட்டுவிடுகிறார்கள் ஆனால் மரக்கதவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டு விட்டால் அதில் தூசிகள் குவிந்து, அதன் பாலிஷ் போய் பார்ப்பதற்கு மங்களாக இருக்கும். அதுமட்டுமின்றி கதவுகளை சுத்தம் செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் ரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் அவற்றின் நிறம் மாறிவிடும்.
அந்த வகையில் உங்கள் வீட்டின் மரக்கதவு ரொம்பவே அழுக்காக இருந்தால், அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று தெரியவில்லையா? இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்க வீட்டு மரக்கதவை பளபளக்க செய்யலாம். இதன் காரணமாக மரக்கதவு சேதமடைய முடியாது. உங்களது கதவு முற்றிலும் சுத்தமாக இருக்கும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Wooden Door Cleaning Tips In Tamil
மரக்கதவை எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்:
சூடான நீர் டிஷ்வாஷ் லிக்விட்
மரக்கதவில் இருக்கும் தூசி மற்றும் அழுக்கை சுத்தம் செய்ய சூடான நீர் மற்றும் டிஷ் வாஷ் லிக்விட் பயன்படுத்தலாம். இதற்கு முதலில் கதவை நன்றாக ஒரு பிரஷ்ஷால் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் சூடான நீர் மற்றும் டிஷ்வாஷ் லிக்விடை நன்றாக கலந்து ஒரு துணியை அதில் நனைத்து பிறகு கதவை நன்றாக துடைக்கவும். இறுதியாக ஒரு உலர்ந்த துணியால் கதவை துடைக்க வேண்டும்.
இதையும் படிங்க: மிதியடியை துவைப்பது இவ்வளவு ஈஸியா? சூப்பர் டிப்ஸ்!!
Wooden Door Cleaning Tips In Tamil
தேங்காய் எண்ணெய் மற்றும் வினிகர்
இதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை கப் வெள்ளை வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து ஒரு மென்மையான துணியை அதில் நனைத்து கதவில் நன்றாக மெதுவாக தேய்க்க வேண்டும். இறுதியாக ஒரு உலர்ந்த துணியால் துடைக்கவும். தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துவதன் மூலம் உங்களது மரக்கதவு முற்றிலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். முக்கியமாக நீங்கள் கதவை இப்படி துடைப்பதற்கு முன் உங்களது கதவை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் அழுக்குகள் அதில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும்.
வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய்:
இதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் நன்கு கலந்து ஒரு துணியை அதில் நனைத்து கதவை நன்றாக துடைக்கவும் இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டு மரக்கதவு பார்ப்பதற்கு புதியது போல் இருக்கும். கதவை இப்படி துடைப்பதற்கு முன் சுத்தம் செய்ய மறந்து விடாதீர்கள்.