MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தரையை துடைச்ச அப்பறம் 'மாப்' அழுக்கா மாறிடுதா? ஈஸியா மாப்பை கிளீன் பண்ண டிப்ஸ்!!

தரையை துடைச்ச அப்பறம் 'மாப்' அழுக்கா மாறிடுதா? ஈஸியா மாப்பை கிளீன் பண்ண டிப்ஸ்!!

Cleaning Mop Tips : நீங்கள் வீட்டை துடைக்க பயன்படுத்தப்படும் மாப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். எனவே மாப்பை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 09 2024, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cleaning Mop Tips In Tamil

Cleaning Mop Tips In Tamil

வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டை ரொம்பவே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். முன்பெல்லாம் வீட்டை துடைப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி அல்ல. மாப் உதவியுடன் மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

25
Cleaning Mop Tips In Tamil

Cleaning Mop Tips In Tamil

ஒவ்வொரு முறையும் நீங்கள் வீட்டை துடைப்பதற்கு மாப்பை பயன்படுத்தும் போது அதை தவறாமல் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இல்லையெனில், அதில் கருப்பு அச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். அதுமட்டுமின்றி அதன் ஆயுளும் நீடிக்காது. 

ஆனால் நீங்கள் உங்களது மாப்பை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் விடாப்பிடியான அழுக்கு மற்றும் கறைகள் போகவில்லையா? இதற்கு சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் மட்டும் போதும். உங்களது மாப்பை மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

இதையும் படிங்க: ஒரு பைசா செலவு கிடையாது.. இந்த '2' பொருள்கள் வாஷிங் மிஷினை பளீச்னு  மாற்றிடும்!!

35
Cleaning Mop Tips In Tamil

Cleaning Mop Tips In Tamil

மாப்பை எளிதாக சுத்தம் செய்வது எப்படி?

வினிகர்

எளிதாக சுத்தம் செய்வதற்கு வினிகர் உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது உங்களது அழுக்கான மாப்பை அதில் சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு ஓடும் தண்ணீரில் மாப்பை நன்கு அலசுங்கள். இப்படி செய்வதன் மூலம் மாப்பில் உள்ள எண்ணெய் கறை, கிரீஸ் போன்றவை இருந்த தடயங்கள் இப்போது இல்லாமல் இருக்கும்.

இதையும் படிங்க:  டூத் பேஸ்ட் பல் தேய்க்க மட்டுமல்ல; இவற்றை சுத்தம் செய்யவும் யூஸ் ஆகும் தெரியுமா?!

45
Cleaning Mop Tips In Tamil

Cleaning Mop Tips In Tamil

எலுமிச்சை

மாப்பில் இருக்கும் விடாப்பிடியான கறை அல்லது அழுக்கை போக்க, ஒரு வழியில் சூடான நீரை நிரப்பி அதில் ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு மாப்பை அதில் சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். எலுமிச்சையின் அமிலத்தன்மை மாப்பில் இருக்கும் அழுக்கை சுலபமாக நீக்கும். அதே சமயம் அதன் சிட்ரஸ் வாசனை மாப்பிற்கு புத்துணர்சியூட்டும் வாசனையை கொடுக்கும்.

வேண்டுமானால் நீங்கள் உங்கள் கைகளால் மாப்பை நன்றாக ஸ்கிரப் செய்யவும். பிறகு ஓடும் நேரில் மாப்பை நன்றாக கழுவி, வெயிலில் காய வைக்கவும். இப்போது பார்த்தால் உங்களது மாப்பில் இருக்கும் கறைகள் நீங்கி வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

55
Cleaning Mop Tips In Tamil

Cleaning Mop Tips In Tamil

டிஷ் சோப்பு

இதற்கு ஒரு வழியில் சூடான தண்ணீரை நிரப்பி, அதில் திரவ சோப்பு அல்லது சலவை சோப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதில் மாப்பை சுமார் 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து தண்ணீரில் நன்கு அலசி காய வைத்து, பின் எப்போதும் போல பயன்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved