புரோட்டீன் பவுடர் வாங்குறவங்க கவனிக்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்!!

First Published | Nov 14, 2024, 9:44 AM IST

Protein Powder Buying Guide : நீங்கள் புரோட்டின் பவுடரை வாங்குகிறீர்கள் என்றால், அதை வாங்கும் முன் சில 5 விஷயங்களை கவனிக்க வேண்டும். அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Protein Powder Buying Guide In Tamil

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே அவர்கள் தங்களது உணவில் புரோட்டின் பவுடர் சேர்த்துக் கொள்கிறார்கள். அதுவும் குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடலுக்கு சிறந்த வடிவத்தை கொடுக்க விரும்புபவர்கள், தங்களது உணவில் புரதம் நிறைந்த சில உணவுகளோடு புரோட்டின் பவுடரையும் சாப்பிடுகிறார்கள். 

Protein Powder Buying Guide In Tamil

புரோட்டின் பவுடர் உடலின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. சரியான புரோட்டீன் பவுடர் உங்கள் உடற்பயிற்சி பயணத்திற்கு பெரிதும் உதவும். இருப்பினும் புரோட்டின் பவுடரின் தவறான தயாரிப்பு அல்லது அதன் முறையற்ற நுகர்வு எதிர்மறையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?

எனவே உங்கள் உடல் மற்றும் தேவைகளின் அடிப்படையில் சரியான புரோட்டின் பவுடரை தேர்வு செய்வது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் புரோட்டின் பவுடர் வாங்குவதற்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:  புரோடீன் பவுடர் ஆரோக்கியத்திற்கு நல்லதா..? கெட்டதா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Tap to resize

Protein Powder Buying Guide In Tamil

புரோட்டின் பவுடர் வாங்குவதற்கு முன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை:

1. எல்லோருக்கும் புரோட்டின் பவுடர் அவசியமில்லை

ஆம் நீங்கள் வாசித்தது சரிதான்.  ஆரோக்கியமான உணவில் புரோட்டின் பவுடர் எல்லாருக்கும் அவசியம் இல்லை. இது பெரும்பாலும் உணவில் அதிக புரத ஆதாரங்கள் இல்லாத நபர்களுக்கு மட்டுமே. நீங்கள் இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் ஆகியவற்றை தவறாமல் எடுத்துக் கொண்டால், புரோட்டின் பவுடர் தவிர்ப்பது நல்லது.

2. சரியான பிராண்ட்

தற்போது புரோட்டின் பவுடர் பல பிராண்டுகளில் விற்பனையாகிறது. இதனால் சரியான பிராண்ட் கண்டுபிடிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். இதற்கு நீங்கள் உங்களது மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அதுபோல எப்போதுமே பிரபலமாக இருக்கும் பிராண்டை மட்டுமே தேர்வு செய்யுங்கள். முக்கியமாக புரோட்டின் பவுடர் வாங்கும் முன் அதன் லேபிலில் சர்க்கரை மற்றும் செயற்கைப் பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

Protein Powder Buying Guide In Tamil

3. மருத்துவர் சொல்வதைக் கேட்கவும்

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அதற்கான முறையை பின்பற்றும்போது நல்ல நிபுணரை அணுகுவது நல்லது. அதுவும் குறிப்பாக, உங்களது உணவு அட்டவணையில் புரோட்டின் பவுடரை சேர்க்கிறீர்கள் என்றால் மருத்துவரின் பரிந்துரைத்த அளவை மட்டுமே பின்பற்றவும். இதன் மூலம் நீங்கள் சிறந்த முடிவுகளை பெற முடியும். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

4. உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்

புரோட்டின் பவுடர் உங்களது உடற்பயிற்சிக்கு ரொம்பவே நல்லது என்றாலும், நீங்கள் உங்களது தசையை அதிகரிப்பதாக இருந்தால் கோதுமை உள்ள புரோட்டின் பவுடரை தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவ உணவுடன் உடற்பயிற்சியை மேம்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் சோயா ப்ரோட்டீன் பவுடரை தேர்வு செய்யலாம்.

Protein Powder Buying Guide In Tamil

5. புரோட்டின் பவுடரின் சுவை

புரோட்டின் பவுடரை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் சுவைதான். புரோட்டின் பவுடரில் பல்வேறு சுவைகள் கிடைக்கின்றன. ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை மட்டும் நீங்கள் தேர்வு செய்யவும்.

இதையும் படிங்க:  இனி ஹார்லிக்ஸ், பூஸ்ட்க்கு நோ சொல்லுங்க.. குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரிக்கலாம் புரோட்டின் பவுடர்!!

Latest Videos

click me!