இனி ஹார்லிக்ஸ், பூஸ்ட்க்கு நோ சொல்லுங்க.. குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரிக்கலாம் புரோட்டின் பவுடர்!!

ABC Powder : வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை நாம் தயாரித்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெறலாம். எந்தவித தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எதுவும் அதில் இருக்காது என்பது மிகப்பெரிய விஷயம்.

how to prepare protein powder or abc powder at home in tamil mks

புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. புரோட்டின் என்பது உடலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். குறிப்பாக, செல்கள் மற்றும் தசைகளுக்கு புரதம் மிகவும் அவசியம் இது தவிர, புரதம் உடல் உறுப்புகள், முடி மற்றும் சருமத்திற்கும் தேவைப்படுகிறது. 

பழங்காய், காய்கறிகள், பருப்பு வகைகள், நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்றவற்றிலிருந்து புரோட்டின் நமக்கு கிடைத்தாலும், பலர் கடைகளில் கிடைக்கும் புரோட்டின் பவுடரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இந்த மாதிரியான எந்தவித புரோட்டின் பவுடரையும் பயன்படுத்தாமல் அவர்கள் ஆரோக்கியமாக தான் இருந்தனர். காரணம், அவர்கள் எடுத்துக்கொண்ட உணவும், பழக்க வழக்கங்களும் தான். ஆனால், இன்றைய காலத்தில் அப்படியில்லை. 

அதாவது பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்ற பவுடர்களை குடித்தால் மட்டுமே தசை வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு ஆரோக்கியம் எல்லாம் வலிமை பெறும் என்று நம்முடைய மூளைக்கும் மனசுக்கும் புகுத்திவிட்டனர். இதை நாம் மட்டும் குடிப்பது மட்டுமின்றி, குழந்தைகளையும் குடிக்க கட்டாயப்படுத்துகிறோம். காலப்போக்கில், இதில் இருக்கும் சுவைக்கு குழந்தைகள் அடிமையாகி விட்டனர். இருப்பினும், இவற்றின் அதிகப்படியான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எப்போதும் எச்சரிக்கின்றனர். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் வீட்டிலேயே புரோட்டின் பவுடரை நாம் தயாரிக்கலாம் தெரியுமா? ஆம், வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை நாம் தயாரித்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெறலாம். எந்தவித தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எதுவும் அதில் இருக்காது என்பது மிகப்பெரிய விஷயம்.

இதையும் படிங்க:  ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? அப்ப தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்!

வீட்டில் புரோட்டின் பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - கால் கிலோ
கேரட் - கால் கிலோ
பீட்ரூட் - கால் கிலோ
நாட்டு சர்க்கரை - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
பாதாம் - 100 கிராம்
பிஸ்தா - 100 கிராம்
ஏலக்காய் - 10

இதையும் படிங்க:  அசைவத்தை விட இந்த 6 பருப்பில் ப்ரோட்டீன் அதிகம் இருக்காம்.. மிஸ் பண்ணாதீங்க!

செய்முறை:
வீட்டிலேயே புரோட்டின் பவுடர் தயாரிக்க முதலில் எடுத்து வைத்த ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை நன்கு கழுவுங்கள். பின் அதன் தோள்களை நீக்கி, துருவிக் கொள்ளுங்கள். பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.  பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து பொடியாக திரித்துக் கொள்ளுங்கள். 

இதனை அடுத்து ஒரு இரும்பு கடையை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து நல்ல பதமாக வதக்கவும். பிறகு அதில் நாட்டு சர்க்கரை வெல்லம் பவுடர் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறவும்.  அதில் தண்ணீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வந்ததும் பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து திரித்து வைத்த பவுடரை இதில் போட்டு நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் அதை சிறிது நேரம் அப்படியே வைத்து பின் மீண்டும் கிளறி கொண்டே இருங்கள். கட்டி கட்டியாக வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து, பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைக்கவும். அவ்வளவுதான் ஏபிசி பவுடர் தயார். 

இதை நீங்கள் காற்று புகாதபடி கண்ணாடி டப்பாவில் வைத்து பயன்படுத்துங்கள்.  இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம் கெட்டுப்போகாது. தினமும் காலை ஒரு கிலோ சூடான பாலில் இதை கலந்து குடியுங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

ஏபிசி பவுடரின் நன்மைகள்:

  • நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
  • வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
  • செரிமானத்தை மேம்படுத்தும்
  • உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
  • சரும நிறத்தை பராமரிக்கும்
  • எடை இழப்புக்கு உதவும்
  • எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios