- Home
- Gallery
- ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? அப்ப தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்!
ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? அப்ப தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்!
காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடித்தால் பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

best morning foods on an empty stomach
இன்றைய பிசியான லைப் ஸ்டைலில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் நீங்கள் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே, காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடித்தால் பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.
best morning foods on an empty stomach
அந்தவகையில், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுவது நல்லது. இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகள் பற்றி இந்த பதிவு நாம் பார்க்கலாம்.
best morning foods on an empty stomach
பப்பாளி: பப்பாளி செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும். ஏனெனில் இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இது தவிர, வைட்டமின் சி பப்பாளியில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
best morning foods on an empty stomach
ஆரோக்கியமான ஜூஸ்: தினமும் காலை வெறும் வயிற்றில் ஆரோக்கியமான ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதற்கு காய்கறி ஜூஸ், அதாவது வெள்ளரி, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகள் ஜூஸ் குடிக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
best morning foods on an empty stomach
பெருஞ்சீரகம் தண்ணீர்: பெருஞ்சீரகம் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றனர். இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகம் தண்ணீர் குடித்து வந்தால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனைகளை குறைக்கலாம்.
இதையும் படிங்க: Skipping Benefits : உடல் எடையை கட்டுக்குப்பாக வைக்க இந்த ஒரே ஒரு 'Exercise' செஞ்சா போதும்!
best morning foods on an empty stomach
வாழைப்பழம்: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் ஆரோக்கியம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலம் கிடைக்கும். நார்ச்சத்தும் இதில் உள்ளது. இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். வாழைப்பழத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆற்றல் கிடைக்கும்.
இதையும் படிங்க: தினமும் 5 நிமிடம் மட்டும் ஒதுக்கினால் போதும்..வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!!
best morning foods on an empty stomach
ஊற வைத்த அத்தி மற்றும் திராட்சை பழம்: ஊற வைத்த அத்திப்பழம் மற்றும் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் நீங்கும். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால், வயிற்று தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D