MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அசைவத்தை விட இந்த 6 பருப்பில் ப்ரோட்டீன் அதிகம் இருக்காம்.. மிஸ் பண்ணாதீங்க!

அசைவத்தை விட இந்த 6 பருப்பில் ப்ரோட்டீன் அதிகம் இருக்காம்.. மிஸ் பண்ணாதீங்க!

நாம் தினமும் பயன்படுத்தும் சில பருப்பில் எதில் அதிகம் புரதம் உள்ளது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Kalai Selvi
Published : Jun 18 2024, 11:30 AM IST| Updated : Jun 18 2024, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
high protein pulses

high protein pulses

பருப்பு இந்திய உணவின் முக்கிய உணவாகும். இவை புரதத்தின் வளமான மூலமாககும். அனைத்து பருப்பு வகைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள. புரதத்தின் பெரும் பகுதி பருப்பு வகைகளில் தான் உள்ளது. இதில் உடலின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

28
high protein pulses

high protein pulses

தொடர்ந்து பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் குறைபாடு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். எனவே, நாம் தினமும் பயன்படுத்தும் சில பருப்பில் எதில் அதிகம் புரதம் உள்ளது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

38
White chick peas

White chick peas

வெள்ளை கொண்டை கடலை: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது தவிர, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த பருப்பு சாதாரண அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

48
Black gram

Black gram

உளுந்தம் பருப்பு: உளுந்தம் பருப்பு, கருப்பு உளுந்து என்று அழைக்கப்படுகிறது. உளுந்தம் பருப்பு புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்த ஆதாரமாக உள்ளது. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல சத்துக்கள் இதில் உள்ளன. இதை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இது தவிர, உளுந்தம் பருப்பில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

58
moong dal

moong dal

பாசிப்பருப்பு: பாசிப்பருப்பு மிகவும் சக்தி வாய்ந்த பருப்பாகும். ஏனெனில், ஒரு கப் பருப்பில் 14.18 கிராம் புரதம் உள்ளது. அதிக புரதம் தவிர, இதில் போதுமான அளவு நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது. இது செரிமான அமைப்பு அதிகரிக்கிறது மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

68
masoor dal

masoor dal

மைசூர் பருப்பு: இந்தப் பருப்பில் புரதம், இரும்பு சத்து, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இந்த பருப்பு உடலில் உள்ள புரத குறைபாட்டை நீக்குகிறது. அரை கப் சிவப்பு பருப்பில் 8 கிராம் புரதம் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்ளுபவர்களுக்கு இந்த பருப்பு சரியானது.

இதையும் படிங்க: அரிசி மற்றும் பருப்புகள் அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்க இந்த டிப்ஸ்கள பாலோ பண்ணுங்க!

78
toor dal

toor dal

துவரம் பருப்பு: பெரும்பாலான இந்திய சமையலறையில் இந்த பருப்பு முக்கியமாக திகழ்கிறது. 100 கிராம் பருப்பில் தோராயமாக 22 கிராம் புரதம் உள்ளது  மேலும் இந்த பருப்பில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.

இதையும் படிங்க:  இந்த 4 பருப்புக்களை உடனே சாப்பிடுவது நிறுத்துங்கள்; இல்லையெனில் மூட்டு வலி வருவது உறுதி!!

 

88
chana dal

chana dal

கடலைப்பருப்பு: உடைத்துக் கொண்ட கடலையில் இருந்து இந்த பருப்பு தயாரிக்கப்படுகிறது. 100 கிராம் பருப்பில் தோராயமாக 22 கிராம் புரதம் உள்ளது. கடலைப்பருப்பில் நார்ச்சத்து, இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved