MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அதிகாலை நடப்பது நன்மைனு நினைச்சிருப்பீங்க.. ஆனா 'இத்தனை' நிமிஷம் தான் நடக்கனும் தெரியுமா?

அதிகாலை நடப்பது நன்மைனு நினைச்சிருப்பீங்க.. ஆனா 'இத்தனை' நிமிஷம் தான் நடக்கனும் தெரியுமா?

Early Morning Walks Benefits : அதிகாலையில் வாக்கிங் செல்வதால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் ம்அது என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 05 2024, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Benefits of Early Morning Walks In Tamil

Benefits of Early Morning Walks In Tamil

பெரும்பாலானோர் அதிகாலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் விஷயம் என்னவென்றால், வாக்கிங் செல்வது தான். ஆனால் பலர் இதை ஒரு உடற்பயிற்சியாக கூட கருதுவதில்லை. ஆனால் உண்மையில், வாக்கிங் என்பது உடலுக்கு மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகளில் ஒன்றாகும் தெரியுமா?

 

25
Benefits of Early Morning Walks In Tamil

Benefits of Early Morning Walks In Tamil

நடைபயிற்சிக்கு பிற உடல் பயிற்சியை போல அதிக முயற்சி ஏதும் செய்ய தேவையில்லை. நடைபயிற்சி முழு உடலையும் செயல்படுத்த தூண்டுகிறது. மேலும் இது உடலில் இருக்கும் பல கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் அதிகாலை நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  பின்னோக்கி நடந்தால் 'முழங்கால் வலி' குணமாகிடும்னு சொல்றது உண்மையா?

35
Benefits of Early Morning Walks In Tamil

Benefits of Early Morning Walks In Tamil

அதிகாலை நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

ஆற்றல் அளவை அதிகரிக்கும்

அதிகாலை நடைபயிற்சி உங்களை விரைவாகவே சோர்வடையச் செய்யும் ஒரு உடற்பயிற்சியாகும். ஆனால் இதுதான் உங்களது உடலுக்கு ஆற்றல் அளவை அதிகரிக்க செய்ய உதவுகிறது தெரியுமா? இதற்கு காரணம் தொடர்ச்சியான நடைபயிற்சி செய்வதால் செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்கின்றது. இதனால் உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்கா அல்லது வீட்டிற்கு வெளியே குறைந்தது 20-30 நிமிடங்கள் நடக்க வேண்டும். மேலும் படிக்கட்டுகளில் 10 நிமிடம் நடந்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் வாக்கிங் போக முடியலையா? அப்ப வீட்ல இருந்து இந்த 4 எக்சசைஸ் பண்ணுங்க!

45
Benefits of Early Morning Walks In Tamil

Benefits of Early Morning Walks In Tamil

நோய்கள் வராமல் தடுக்கப்படும்

அதிகாலை நடைபயிற்சி வழக்கமான உடற்பயிற்சியின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேலும் இது உங்களை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது.  நீங்கள் தினமும் அதிகாலை குறைந்தது 30 நிமிடங்கள் நடந்தால், எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும். அதுபோல ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் நடந்தால் முழு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 

எடையை குறைக்க உதவும்

தினமும் அதிகாலை நீங்கள் சுமார் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உங்களது உடலில் சுமார் 400 கலோரிகளை குறைக்க உதவுகிறது. ஆனால், இது நடையின் வேகம் மற்றும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தை பொறுத்தது. 

55
Benefits of Early Morning Walks In Tamil

Benefits of Early Morning Walks In Tamil

உடல் பிரச்சினைகளை தடுக்கும்

அதிகாலை நடைபயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும். இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் தடுக்கப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நடைபயிற்சி ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பதால் இதனால் சர்க்கரை நோய் முதல் இதய நோய் அபாயத்தை பெருமளவும் குறைக்க உதவுகிறது. இதற்கு தினமும் 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது தவிர அதிகாலை நடைபயிற்சி சுவாச ஆரோக்கிய மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்திலிருந்தும் உங்களை பாதுகாக்கும்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அதிகாலை நடைபயிற்சி உங்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எப்படியெனில் நடைபயிற்சி முழு உடல் உறுப்புகளையும் இயங்க வைக்கிறது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றின் அளவு அதிகரித்து, அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய வழி வருகிறது. இதன் காரணமாக உங்களது மனநிலை மேம்படுத்தப்படுகிறது. இதனால் பதட்டம் மன அழுத்தம் சோர்வு ஆகியவை குறையும். இதற்கு நீங்கள் குறைந்தது 20 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
Recommended image2
Tea Filter Cleaning Hacks : டீ வடிகட்டில கறை போகவே மாட்டேங்குதா? இப்படி ஒருமுறை கிளீன் பண்ணி பாருங்க.. புது போல ஜொலிக்கும்!
Recommended image3
பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved