தினமும் வாக்கிங் போறதுல 'இப்படி' ஒரு நன்மையா? இதய நோய் கூட வராது தெரியுமா?
Walking for Heart Health : இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கு நமது மோசமான வாழ்க்கை முறையே காரணமாகும். ஆனால் இந்த நோயின் அபாயத்தை சிறிது நேரம் நடப்பது மூலம் குறைக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Walking for Heart Health In Tamil
இன்றைய காலகட்டத்தில் இதய நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக வயதானவர்களுக்கு இதய நோய் அபாயம் அதிகம் உள்ளன. எனவே வயதானவர்கள் இதய ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு நிபுணர்கள்.
WHO அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு கோடி பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு இல்லாமல், புகையிலை மற்றும் மதுவின் தீங்கு விளைவிக்கும் பயன்பாடு ஆகியவை இதற்கு பின்னால் உள்ள மிகப்பெரிய காரணங்கள் ஆகும்.
Walking for Heart Health In Tamil
நல்ல செய்தி என்னவென்றால் பெரும்பாலான இதய நோய்களை தடுக்கலாம் ஆம் இந்த ஆபத்தை குறிக்க எளிய வழிகளில் ஒன்று தான் நடைபெச்சி ஒரு சில நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை கணிச்சமாக குறைக்கும் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. எனவே இதய நோய் அபாயத்தை தடுக்க நீங்கள் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
Walking for Heart Health In Tamil
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
ஆய்வு ஒன்றின் படி, ஒரு நாளைக்கு 21 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 30 சதவிகிதம் குறைக்கும். இது வாரத்தில் ரெண்டரை மணி நேரம் நடப்பதற்கு சமம். மேலும் இப்படி நடப்பதன் மூலம் எடை, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குறைக்கலாம். நினைவாற்றலை மேம்படுத்தவும், இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் 30 நிமிடம் வாக்கிங் போனா.. நீங்க கற்பனை செய்ய முடியாத நன்மைகள்!!
Walking for Heart Health In Tamil
நடைப்பயிற்சி எவ்வாறு இதை ஆராய்வதை மேம்படுத்தும்?
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இது ஆற்றலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவையும் மேம்படுத்துகிறது. கூடுதலாக நடைப்பயிற்சி டைப் 2 நீரிழிவு, சில புற்று நோய்களில் அபாயத்தையும் குறைக்கிறது மற்றும் எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும் நடைப்பயிற்சியானது இதய நோய் காண முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றான மன அழுத்தத்தையும் குறைக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றன.
இதையும் படிங்க: சர்க்கரை நோய் கட்டுக்குள் வர.. ஈஸியான வழி இருக்கு.. 'இப்படி' வாக்கிங் போனா போதும்!!
Walking for Heart Health In Tamil
இதய நோய் அபாயத்தை குறைக்க வேறு வழிகள் :
1. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
2. ஆரோக்கியமான கெட்ட கை பராமரிப்பது இதை ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
3. இது தவிர புகைபிடித்தல் மற்றும் மதுபானம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதை இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.