ஒரு விக்கெட், ஒரு கேட்ச் கூட இல்ல, பேட்டிங்கிலும் 0 – ஓரங்கட்டப்படும் சீனியர் வீரர்!

First Published Jun 16, 2024, 3:51 PM IST

இந்திய அணியின் சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா, இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை, ஒரு கேட்ச், ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத நிலையில், இனி வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ravindra Jadeja, T20

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Virat Kohli

இதில், இந்திய அணி முதல் 3 குரூப் சுற்று போட்டிகளை நியூயார்க் மைதானத்தில் விளையாடியது. இதில், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும், அக்‌ஷர் படேல் கூடுதலாக விக்கெட் எடுக்க சீனியர் மற்றும் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா விக்கெட் கைப்பற்றவில்லை.

Ravindra Jadeja

இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியுள்ளார். அதிலும், அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. அடுத்து பேட்டிங்கில் ஜடேஜா ஒரு பந்து மட்டுமே பிடித்த நிலையில் அதிலும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

Team India

பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேல் 7 மற்றும் 8ஆவது வரிசையில் இடம் பிடித்திருந்தனர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் டாப் ஆர்டரில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது அக்‌ஷர் படேல் தான் 4ஆவது வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார்.

Indian Team Practice

அக்‌ஷர் படேலை விட சிறப்பு வாய்ந்த பேட்ஸ்மேனாக ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார். அப்படியிருக்கும் போது ஜடேஜா மீது நம்பிக்கை வைக்காமல் அக்‌ஷர் படேலைத் தான் ரோகித் சர்மா அதிகளவில் நம்பியிருந்தார். இதன் காரண்மாக ஜடேஜா ஒதுக்கப்படகிறார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

IND vs CAN, T20 World Cup 2024,

இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின், டி20 அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா ஒரு ரன் கூட அடிக்கவில்லை. ஒரு கேட்ச் கூட பிடிக்கவில்லை. ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

T20 World Cup 2024

குரூப் சுற்று போட்டியைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸில் சூப்பர் 8 சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுழற் பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த போட்டிகளில் ஜடேஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!