Kalki : "யுத்தத்தில் வெற்றி மரணத்திற்கே".. ஹாலிவுட் வியக்கும் காட்சி அமைப்புகள் - கல்கி 2898 AD ட்ரைலர் இதோ!

Ansgar R |  
Published : Jun 22, 2024, 04:31 PM IST

Kalki 2898 AD Trailer : பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இன்னும் 5 நாட்களில் வெளியாகவுள்ளது, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான கல்கி 2898 AD.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனரான நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் கல்கி, சுமார் 2898 ADயில் நடக்கும் ஒரு கதை அம்சத்தை உருவாக்கி, அதில் தன் கற்பனையால் அஸ்வின் விளையாடியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்திய நடிகர்கள் பலரும் நடித்திருக்கின்றனர். 

குறிப்பாக பாலிவுட் உலகின் மூத்த நடிகர் அமிதாபச்சன், தமிழ் திரை உலகின் உலகநாயகன் கமல்ஹாசன், தெலுங்கு திரை உலகின் ரெபெல் ஸ்டார் பிரபாஸ், பிரபல நடிகை தீபிகா படுகோனே, மூத்த தமிழ் திரை உலக நடிகை ஷோபனா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 

தண்ணீருக்காக நடக்கும் யுத்தமாக இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஒரு சில காட்சிகள், ஹாலிவுட் உலகில் வெளியாகி மெகா ஹிட்டான "மேட் மேக்ஸ் ப்யூரி ரோடு" திரைப்படத்தின் காட்சி அமைப்புகளை ஒத்திருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

எது எப்படி இருந்தாலும், இந்திய சினிமாவை உலக தரத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லும் ஒரு திரைப்படமாக இந்த கல்கி நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், தற்போது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
02:25Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?
Read more