Jai Marriage: இளம் நடிகையோடு திடீர் திருமணம்? ஹனி மூன் கிளம்பிய ஜெய்... அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

First Published Apr 30, 2024, 6:43 PM IST

இளம் நடிகை பிரக்யா நக்ரா கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, புது வாழ்க்கை ஆரம்பம் என, நடிகர் ஜெய் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

jai

கோலிவுட் திரையுலகில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஜெய். தன்னுடைய முதல் படத்திலேயே, தளபதி விஜய்க்கு தம்பியாக 'பகவதி' படத்தில் அறிமுகமானார். இந்த படம் வந்த போது, ஜெய் ஒரு ஜாடையில் பார்க்க விஜய் போலவே இருப்பதாக கூறியதால், ஜெய்க்கு அடுத்தடுத்த படங்களில் நடக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

பகவதி படத்திற்கு பின்னர், கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் ஜெய் நடித்த, சுப்ரமணியபுரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால்... ஜெய் அடுத்த லெவலுக்கு சென்றார்.

20 வருடத்திற்கு பின் 'கில்லி' படத்தை கொண்டாடும் நீங்கள்... இதை எப்போது செய்வீங்க? ஆதங்கத்தை கொட்டிய தாமு!
 

எனினும் இந்த படத்திற்கு பின்னர் இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது, ஜெய்யின் திரையுலக வாழ்க்கையில் பெரிய ட்ரா பேக்காக அமைந்தது. தொடர்ந்து வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த ஜெய்,  அட்லி இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஜெய் நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கறுப்பர் நகரம் என்கிற படத்திலும் ஜெய் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டும் இன்றி, வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் ஜெய், ட்ரிபிள்ஸ், மற்றும் லேபிள் என இரண்டு வெப் தொடரில் நடித்துள்ளார்.

Aparna Das Reception Photos: நடிகை அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!

Actor Jai

சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத நடிகர் ஜெய், ஏற்கனவே நடிகை அஞ்சலியுடன் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் நடித்த போது.. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்வது போல் இருவரும் நடந்து கொண்டது ஒருபுறம் இருக்க, பின்னர் அஞ்சலி இருவரும் நண்பர்கள் மட்டுமே என தெரிவித்தார்.
 

இதை தொடர்ந்து, பிரபல இளம் நடிகையான பிரக்யா நக்ராவுடன் ஜோடியாக ஜெய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரக்யா இந்த புகைப்படத்தில் தாலியோடு இருக்க... ஜெய் தன்னுடைய கையில், பாஸ்போர்ட் வைத்துள்ளார். திருமணமான கையேடு ஹனி மூன் செல்வது போல் உள்ள இந்த புகைப்படத்திற்கு கீழே கடவுளின் ஆசியோடு புதிய வாழ்க்கை ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!

இதை பார்த்து ரசிகர்கள் பலர், இது நிஜமா? அல்லது திரைப்பட புரோமோஷனுக்காக இப்படி போஸ் கொடுத்துள்ளார்களா? என குழம்பி போய் உள்ளனர். ஆனால் இது குறித்து நாம் விசாரித்ததில், ஜெய், பிரக்யா நாக்ரா ஜோடியாக நடிக்கும் 'பேபி அன்ட் பேபி' என்ற படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் இது என்பது தெரியவந்துள்ளது.

click me!