Horoscope Today: ஜூன் மாதத்தில் நிகழும் 5 பெரிய கிரகங்களின் ராசி மாற்றம்...யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

First Published May 27, 2022, 4:01 PM IST

Indriya Rasipalan 2022- Horoscope Today: ஜூன் மாதத்தில்  5 பெரிய கிரகங்கள் தனது ராசியை மாற்றப் போகின்றன. கிரகங்கள் ராசி மாறும் போதெல்லாம் அது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். ஒரு கிரகம் ராசி மாற்றினாலே அதன் பலன் கடுமையாக இருக்கும். அப்படியாக, இந்த மாதம்  5 கிரகங்கள் தனது ராசியை மாற்றுகின்றன. இதனால், யாருக்கு என்னென்னெ பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

planets

ஜூன் மாதத்தில் 5 கிரகங்கள் ராசி மாற்றம்

வருகிற வாரம் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஜூன் மாதத்தில் சில முக்கிய பெரிய கிரகங்கள் தனது ராசியை  மாற்றப் போகின்றன. அதன்படி, ஜூன் 2, 2022 செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார். ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்வார். ஜூன் 15ஆம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது. ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் அதாவது குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். ஆடம்பர வாழ்க்கையின் காரணியாக சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். 

மேலும் கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் காணப்படும். எந்த கிரகம் என்னென்னெ பலன்கள் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

planets

விருச்சகம்:

விருச்சகம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், சிறப்பாக இருக்கும். அதிஷ்டம் தேடி வரும்.  உங்களது முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கௌரவம், மரியாதை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். 

5 planets

மிதுனம்: 

ஜூன் 2, 2022 செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார். இதனால்,  கிரகங்களின் ராசி மாற்றம், மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

planets

ரிஷபம்: 

ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்வார்.இன்று உங்கள் உடல் நலம் குறைபாடு ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் குறையும். சொந்த தொழில் துவங்கும் உங்களுக்கு நஷ்ட்டம் ஏற்படும். புதிய நட்பு உறவு உண்டாகும். இந்த நேரத்தில், வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

planets 001

கடகம்:

சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிக பயணம் செல்லலாம். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிரிகள் வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

 மேலும் படிக்க ...Guru Peyarchi 2022: குரு பெயர்ச்சியால் 2023 வரை அமோகமான இருக்கும் ராசிகள்..இன்று முதல் அதிர்ஷ்ட காற்று ஆரம்பம்

click me!